‘ஜிஸ்பி’, ‘டாடா’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் ஓலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார் தயாரிப்பில் பிரபல ஆர்ஜே-வும், சில படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்தவருமான விஜய் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ‘டாணாக்காரன்’ புகழ் அஞ்சலி நாயர் நடிக்கிறார்.
அறிமுக இயக்குநர் ஹேமநாதன் இயக்கும் இப்படத்தின் கதை கணவன்-மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் மோதல்களை கருவாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. பல கனவுகள் கொண்ட ஒருவன் குடும்பத்திற்காக தனது கனவுகளை தியாகம் செய்து, நல்ல கணவனாக வாழ்வில் எப்படி வெற்றியடைகிறான் என்ற ரீதியில் இப்படத்தின் கதை பயணிக்கிறது.
ஆர்ஜே விஜய், அஞ்சலி நாயர் முதன்மை வேடத்தில் நடிக்க, மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், மேத்யூ வர்கீஸ், லல்லு, கதிர் மற்றும் பல முன்னணி நடசத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். சிவசங்கர் இப்படத்தின் கலை இயக்குநர்.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனத்தின் 8 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 12 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...