Latest News :

ஆத்மார்த்தமான படைப்பாக உருவாகியுள்ள ‘ஆலன்’!
Friday December-15 2023

3எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிவா.ஆர் தயாரித்து இயக்கும் படம் ‘ஆலன்’. இதில் நாயகனாக ’எட்டுத் தோட்டக்கள்’ பட புகழ் வெற்றி நடிக்க, நாயகியாக ஜெர்மனியைச் சேர்ந்த தபேயா மதுரா நடித்திருக்கிறார். இவர்களுடன் கருணாகரன், விவேக் பிரசன்னா, அருவி மதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

தமிழில் முழுமையான காதல் படங்கள் வருவது மிகவும் அரிதாகவிட்டது, என்ற குறையை போக்கும் வகையில்,  முழுமையான ரொமான்ஸ் மற்றும் வாழ்வின் அழகை சொல்லும் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டார்.

 

’ஆலன்’ என்பதன் பொருள் படைப்பாளி என்பதாகும். சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் 15ம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராதா  நிகழ்வு. அவனின் காதல், 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம் தான் இப்படம்.  

 

வாழ்வின் எதிராபார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம்,  காதல், ஆன்மீகம், எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் சிவா.ஆர்.

 

Alan

 

கொடைக்கானல், ராமேஸ்வரம், காசி, ரிஷிகேஷ் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில், தற்போது இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

 

‘ஆலன்’ படத்தின் டீசர், டிரைலர் வெளியீடு பற்றிய விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Related News

9400

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் வெளியான ‘சங்கராந்தி வஸ்துனம்’!
Sunday March-02 2025

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!
Sunday March-02 2025

இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...

இயக்குநர் மோகன்.ஜி - ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் உருவாகும் ‘திரெளபதி 2’!
Sunday March-02 2025

‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...

Recent Gallery