ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கோலிவுட்டின் கவனம் ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், தனது இரண்டாவது படமான ‘லவ் டுடே’ மூலம் நாயகனாக அறிமுகமாக திரைத்துறை மட்டும் இன்றி ரசிகர்களிடன் கவனத்தையும் ஈர்த்தார். இதனால், பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நாயகனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது.
இந்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படத்தின் துவக்க விழா பூஜையுடன் நடைபெற்றது. இதில், இயக்குநர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, தயாரிப்பாளர் லலித் குமார், இணைத் தயாரிப்பாளர் எல்.கே.விஷ்னு குமார் உள்ளிட்ட படக்குழுவினர்கள் கலந்துக்கொண்டார்கள்.
இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில், புதுவிதமான காதலை சொல்லும் ரொமான்ஸ் காமெடிப் படமாக, இயக்குநர் விக்னேஷ் சிவனின் வித்தியாசமான திரைக்கதையில், இப்படம் அனைவரையும் கவரும் கமர்ஷியல் படமாக உருவாகிறது.
கலக்கலான காதல் காமெடிப் படங்களுக்கு பெயர் பெற்ற விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணி இப்படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரதீப் இ.ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தின் மற்ற மேலும் பல விபரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...