Latest News :

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ‘கொடுக்காளி’!
Saturday December-16 2023

பல்வேறு விருதுகளை வென்ற ‘கூழாங்கல்’ திரைப்பட இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கொட்டுக்காளி’. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் இப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்க, நாயகியாக அன்னா பென் நடித்திருக்கிறார். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தை சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள உலக புகழ் பெற்ற பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘கொட்டுக்காளி’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. 

 

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிற்கு ஒரு திரைப்படம் தேர்வாகி இருக்கிறது என்பது உலக அளவில் ஒட்டுமொத்த திரைப்படத் துறையினருக்கும் பெருமை மிகு அடையாளம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது பற்றி படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறுகையில், “நம்பிக்கைக்குரிய திறமைசாலிகளை ஊக்குவிக்கவும், அவர்களின் கனவுகளை நனவாக்கவும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் செயல்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக, என்னைச் சுற்றி தொழில் மீது ஆர்வம் கொண்ட திறமைசாலிகள் சரியாக அமைந்துள்ளனர். மொழி மற்றும் பிராந்திய தடைகளுக்கு அப்பால் அனைவரும் தொடர்புபடுத்தக்கூடிய மனித உணர்ச்சிகளை அங்கீகரிக்கும் தனித்துவமான கதைகளை உருவாக்க எங்கள் தயாரிப்பு நிறுவனம் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளது. இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் கொடுத்திருக்கும் ஒரு அற்புதமான படைப்பை நாங்கள் தயாரித்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். பெர்லின் சர்வதேச திரைப்பட விழா என்பது உலகத் திரையுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இடம். மேலும், வரவிருக்கும் ஆண்டுகளில் நாம் மறக்க முடியாத பெருமைமிகு நினைவாகவும் இது இருக்கும்.” என்றார்.

 

பி.சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்கிறார். சுரேஷ் ஜி மற்றும் அழகிய கூத்தன் ஒலி வடிவமைப்பு மேற்கொள்ள, ரமேஷ் ஒலி ஒத்திசைவு பணியை மேற்கொண்டுள்ளார். தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்  சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் இபப்டத்தின் இணை தயாரிப்பாளராக கலை அரசு பணியாற்றுகிறார்.

Related News

9403

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...