Latest News :

‘வட்டார வழக்கு’ திரைப்படத்தின் உலக உரிமையை கைப்பற்றிய சக்தி ஃபிலிம் சிக்நேச்சர்!
Saturday December-16 2023

மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ்  கே.கந்தசாமி மற்றும் கே.கணேசன் வழங்கும் இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில் ‘டூலெட்’ திரைப்பட புகழ் சந்தோஷ்  நம்பிராஜன் மற்றும் ரவீனா ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வட்டார வழக்கு’.

 

பொதுவாக பிராந்தியத்தை சார்ந்த படங்களும், வட்டாரத்தை சார்ந்த படங்களும், அதன்  வட்டார மொழிகளும் வெகு ஜனங்களை சேரும்  அதன் மூலம் பெரும் வெற்றி பெறும் என்பது  திரை உலகத்தினுடைய  நம்பிக்கை.  இதன் சான்றாக பல திரைப்படங்கள் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அப்படி ஒரு திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘வட்டார வழக்கு’ திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

 

மதுரை மேற்கில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு பகை, காதல், கோபம், வெறுப்பு, கொலை, வழக்கு என்ற பல பரிமாணங்கள் அடங்கிய ஒரு எதார்த்த திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்தனை ஆண்டுகள் தமிழ் சினிமா காணாத காதல்  காட்சிகள் போல் இல்லாமல்,  காதல் வசனங்கள் இல்லாமல் இவ்வளவு ஏன் காதலர்கள் நேரிலும் சந்திக்காமல்  மலர்ந்த  ஒரு புதுவிதமான காதல் உணர்வை காட்டுகிறார் இயக்குநர்  கண்ணுச்சாமி ராமச்சந்திரன். 

 

Vattara Vazhakku

 

1985 ஆம் ஆண்டில்  நடக்கின்ற இத்திரைக்கதையில், 1962  ஆம் வருடத்தில்  நடப்பது போல் ஒரு குட்டி ஃபிளாஷ்பேக் எடுக்க ஒரு இடம் தேவைப்பட்டுள்ளது. அப்போது மேற்கு மதுரையில் உள்ள  கல்லுப்பட்டி  என்ற கிராமம் எத்தனை ஆண்டுகள் ஆகியும் எந்த வித வளர்ச்சியும் இல்லாமல் அதே பழமையுடன் இருப்பது தெரியவர, அக்கிராமத்தில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தியிருக்கிறார்கள்.

 

தற்போது இப்படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் டிசம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாக இருக்கும் தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

மேலும், இப்படத்தின் ஒட்டு மொத்த உலக வெளியீட்டு உரிமையை சக்தி ஃபிலிம் சிக்நேச்சர் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சக்தி ஃபிலிம் பேக்டரில் நிறுவனம் சார்பில் பி.சக்திவேலன் ஒரு திரைப்படத்தை வெளியிடுகிறார் என்றாலே அப்படம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துவிடும், நிலையில் அவரது சக்தி ஃபிலிம் சிக்நேச்சர் சார்பில் உலகம் முழுவதும் இந்த படம் வெளியாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

Vattaara Vazhakku

 

’மூடர் கூடம்’ டோனி ஷார்ட் மற்றும் சுரேஷ் மண்ணியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு வெங்கட்ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Related News

9404

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் வெளியான ‘சங்கராந்தி வஸ்துனம்’!
Sunday March-02 2025

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!
Sunday March-02 2025

இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...

இயக்குநர் மோகன்.ஜி - ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் உருவாகும் ‘திரெளபதி 2’!
Sunday March-02 2025

‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...

Recent Gallery