Latest News :

அருள்நிதி இல்லாமல் நடைபெற்ற ’டிமான்டி காலனி 2’ டிரைலர் வெளியீட்டு விழா! - காரணம் இது தான்
Sunday December-17 2023

அஜய் ஞானமுத்து இயக்கத்தி, அருள்நிதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’டிமான்டி காலனி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. திகில் படம் என்றாலும் அழுத்தமான திரைக்கதையுடன் பயணித்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டு பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் ’டிமான்டி காலனி 2’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. இயக்குநர் அஜய் ஞானமுத்து மற்றும் நடிகர் அருள்நிதி மீண்டும் இந்த இரண்டாம் பாகத்திற்காக இணைந்திருப்பதோடு, பிரியா பவானி சங்கரும் நாயகனுக்கு இணையான ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார்.

 

விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை வி.ஆர் மாலில் உள்ள பி.வி.ஆர் திரையரங்கில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்ட இந்த நிகழ்வில் நாயகன் அருள்நிதி பங்கேற்கவில்லை. ’டிமான்டி காலனி’ இரண்டாம் பாகம் உருவாக மிக முக்கியமானவராக இருந்த அருள்நிதியே பட விழாவில் பங்கேற்காதது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் ஏன் பங்கேற்கவில்லை? என்பதற்கான காரணத்தை படக்குழு தெரிவித்தது. அதாவது, அருள்நிதிக்கு வைரஸ் காய்ச்சல் அதிகமாக இருக்கிறதாம், அதனால் தான் அவரால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. நிச்சயம் ’டிமான்டி காலனி 2’ படத்திற்காக விரைவில் பத்திரிகையாளர்களை அவர் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

 

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் பேசுகையில், “பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் முதல் முறையாகத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளோம். நாங்கள் பிஸினஸ் க்ளோபல் சாஃப்ட் வேர் கம்பனி ஏன் படத்தயாரிப்பு என்ற கேள்வி இருந்தது. மக்களிடம் சென்று சேர வேண்டும் ஹாலிவுட்டில் இருப்பது போல் மிகப்பெரிய ஸ்டூடியோவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இறங்கியுள்ளோம். ஒரு படம் பத்து படம் மொத்தமாகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் ஐடியா இல்லை.  மக்கள் எதை ரசிக்கிறார்கள் எது அவர்களுக்குப் பிடிக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்தோம். மக்களுக்கு ஹாரர் படங்கள் பிடிக்கிறது. டிமான்டி காலனி அருள்நிதி அஜய் ஞானமுத்து டீம் மீண்டும் ஒரு படம் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம். அவர்கள் சராசரி படமாக இதைச் செய்யவில்லை. படத்தில் வரும் கதை அழுத்தமானது அதே டெக்னிகலாக இதுவரை பார்த்திராத உலகம் சவுண்டிங், சிஜி எல்லாமே உலகத்தரம். ஆதலால் நாங்கள் இதில் இணைந்து கொண்டோம். இந்தப்படம் பார்க்கும் போது இந்த புதிய உலகத்தை நீங்கள் ரசிப்பீர்கள். ஒரு சின்ன அறிமுகம் தான் இந்த டிரெய்லர், இன்னும் நிறைய ஆச்சரியங்கள் இருக்கிறது. படத்திற்கு உலகம் முழுதும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யும் நாங்கள் வெவ்வேறு ஜானரில் நான்கு படங்கள் செய்து வருகிறோம் ஆனால் எங்களின் முதல் அடையாளமாக டிமான்டி காலனி இருக்கும்.” என்றார்.

 

பிடிஜி யுனிவர்சல் நிறுவனத் தலைவர் மனோஜ் பெனோ பேசுகையில், “நான் ஒரு டாக்டர்,   சினிமா எதற்காக  என்றால், இந்த இன்ட்ஸ்ட்ரி தேவைகளை சப்ளை செய்யும் ஒரு துறையாக இருக்கிறது. எண்டர்டெயின்மெண்ட் தேவை இங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் இருக்கிறது, அது இருக்கும் வரை நாங்கள் உழைத்துக்கொண்டே இருப்போம். மக்கள் எங்களை வாழ வைப்பார்கள் அதனால் தான் சினிமா. பாபி சினிமாவுக்குள் வருவதாகச் சொன்ன போது ஆச்சரியப்பட்டேன் ஆனால் அவர் வந்த பிறகு முன்னமே வந்திருக்கலாம் என்று தோன்றியது. அவ்வளவு பெரிய மாற்றத்தை திரைத்துறைக்குள் கொண்டு வந்திருக்கிறார். டிமான்டி காலனி 2 ட்ரைலரில் நீங்கள் பார்த்தது ஒரு பருக்கை தான். இன்னும் உங்களை மிரட்டுவதற்கு நிறைய இருக்கிறது அதற்குக் காரணமானவர் அஜய் ஞானமுத்து தான். அவர் பேய்க்கு பயந்தவர் ஆனால் பாருங்கள் நம்மை எப்படியெல்லாம் மிரட்டுகிறார். இப்படம் உங்களை ஒரு நொடி கூட திரும்ப விடாது. அருள்நிதி ஒவ்வொரு சின்ன விசயத்திலும், அக்கறை எடுத்துக்கொண்டு அர்ப்பணிப்போடு உழைத்திருக்கிறார்.  பிரியா இந்தப்படத்தில் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். அவருக்கு முக்கியமான படமாக இப்படம் இருக்கும். அருண் பாண்டியன் சார் எனக்கு அண்ணா தான். எங்களுக்கு எல்லா விசயத்திலும் அறிவுரை தந்து ஆதரவாக இருந்தார். சாம் சி எஸ் இசையில் சின்ன சின்ன சவுண்டிங்கில் அசத்தியிருக்கிறார். இந்தப்படம் ஒரு புதிய விஷுவல் ட்ரீட்டாக இருக்கும், படத்திற்கு ஆதரவைத் தாருங்கள்  அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் விஜய் சுப்பிரமணியன் பேசுகையில், “ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஆதரவு தந்த பாபி அவர்களுக்கும், அருள் நிதி அவர்களுக்கும் நன்றி. படம் முழுக்க ஆதரவாக இருந்த அருண் பாண்டியன் அவர்களுக்கும் நன்றி. எல்லோருக்கும் நன்றி. மிகச்சிறப்பான படமாக இப்படம் இருக்கும்.” என்றார்.

 

ஞானமுத்து பட்டறை  சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ராஜ்குமார் பேசுகையில், “இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்து இணை தயாரிப்பாளராகவும், ஒரு நடிகராகவும் மாற்றிய என் மகன் அஜய்க்கு நன்றி. இக்கட்டான ஒரு சூழலில் என் மகனிடம் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று ஊக்கம் தந்த அருள் நிதிக்கு நன்றி, தயாரிப்பாளர்கள் மற்றும் படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். படத்திற்கு மீடியா ஆதரவு தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி.” என்றார்.

 

நடிகர் அருண் பாண்டியன் பேசுகையில், “இப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் பாபி மற்றும் மனோவிற்கு என் நன்றி. இந்தக்கதையை அஜய் சொன்ன போது மிகவும் உணர்வுப்பூர்வமான கதாப்பாத்திரம், நான் ஓகேவா என்று கேட்டேன். நீங்கள் தான் வேண்டும் என்றார். அருள் நிதி ஃபிரண்ட்லியாக இருந்தார். பிரியா என் தோழி, அவருடன் பழகியது வீட்டில் இருப்பது போல் உணர்வைத் தந்தது. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது எல்லோரும் கண்டிப்பாக ரசிப்பீர்கள் எல்லோருக்கும் நன்றி.” என்றார்.  

 

நடிகர் முத்துக்குமார் பேசுகையில், “அஜய்க்கு என் நன்றி. பொதுவாகக் கதை சொல்லும் போது என் கேரக்டர் என்ன, அது எப்படி பிகேவ் பண்ணும் என்று பார்ப்பேன். அப்படித்தான் நான் முதலில் இப்படத்தில் நடித்தேன். ஆனால் அஜய் அது வேண்டாம் என்று சொல்லிவிட்டு, எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லித்தந்தார். அஜய்க்குள் மிகச்சிறந்த நடிகன் இருக்கிறான். அவர் சொன்னது போல் தான் எல்லோரும் நடித்தோம். ஒவ்வொன்றையும் பார்த்துச் பார்த்து செய்துள்ளார். தயாரிப்பாளர்களுக்கு என் நன்றிகள். இப்படத்தில் காமெடி உட்பட எல்லாமே சிறப்பாக வந்துள்ளது. படம் புதுசாக இருக்கும். எல்லோருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் பேசுகையில், “அஜய் சாருக்கு கோப்ரா வாய்ப்பிற்கே நன்றி சொல்ல வேண்டும். இந்த மேடையில் நன்றி சொல்லிக்கொள்கிறேன், எனக்கு ஒரு கைட் மாதிரி இருந்து வருகிறார். டிமான்டி வந்த போது எனக்கு 15 வயது, இப்போது இரண்டாம் பாகத்தில் நான் நடிப்பது பெருமையாக உள்ளது. அருள்நிதி சார், பிரியா மேடம் எல்லோருக்கும் என் நன்றிகள். படத்தில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்.” என்றார்.

 

இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசுகையில், “இயக்குநர் அஜய்யிலிருந்து ஆரம்பிக்கிறேன். ஒரு இரையைத் தவறவிட்ட மிருகத்திற்குத் தான் அடுத்த இரையில் எவ்வளவு கவனமாக  இருக்குமென்று தெரியும். ஒரு கலைஞனின் படைப்பு தோற்கலாம் கலைஞன் தோற்பதில்லை. இந்தப்படத்தில் அஜய் மிரட்டியிருக்கிறார். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். இந்தப்படத்தில் வேலை பார்ப்பதற்காக வேறு பல படங்கள் நான் செய்யவில்லை, கொஞ்சம் வருத்தம் தான் ஆனால் இறுதியாகப் படம் பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜய் கண்டிப்பாக இப்படத்தில் சிக்ஸர் அடிப்பார். தயாரிப்பாளர் பாபி சார் படத்தைக் காதலித்து ரசித்து தயாரிக்கிறார், இப்படத்தை அவர் பிஸினசாக அணுகவில்லை, ஆத்மார்த்தமாகப் பிடித்துச் செய்கிறார் அவருக்கு இந்தப்படம் பெரிய வெற்றியைத் தரும். டெக்னிகல் டீம் இப்படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சிஜி எல்லாம் அருமையாக வந்துள்ளது. இப்படம் எங்களுக்கே பயத்தைத் தருகிறது, ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.” என்றார்.

 

நாயகி பிரியா பவானி சங்கர் பேசுகையில், “உங்கள் ஆதரவு எங்களுக்கு முக்கியம். போன வருடம் இந்தப்படம் ஆரம்பித்தோம் அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. நிறைய நைட் ஷூட் பண்ணினோம், எனக்கு இந்த கதாபாத்திரம் தந்ததற்கு அஜய்க்கு பெரிய நன்றி. அருள்நிதி உடன் இரண்டாவது படம் எனக்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். அருண் பாண்டியன் சார் உடன் ஷீட்டில் வீட்டுக்கதைகள் பேசிக்கொண்டிருப்பேன், ஜாலியாக இருந்தது. மீனாட்சி மிக அழகாக நடித்துள்ளார். பாபி சார் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியாக இந்தப்படம் அமையும். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றிகள். படம் கண்டிப்பாக அனைவரையும் மிரட்டும்படி இருக்கும் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசுகையில், “பாபி சார் அவர் தான் இந்தப்படம் பெரிதாக வரக் காரணம். ஒரு படம் இயக்கும்போது இயக்குநருக்கு அந்தப்படத்தின் செலவைக் குறைக்க மனது வராது, படத்தைத் தரமாகத் தரத்தான் நினைப்பார்கள் ஆனால்  ஒருகட்டத்தில் எங்களால் முடியாத போது அதற்கு ஆதரவாகக் கிடைத்தவர் தான் சுப்பிரமணியன் சார். அவருக்கு என் நன்றி. நாம் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், தாத்தா பேரில் ஆரம்பித்து அப்பாவை தயாரிப்பாளர் ஆக்கிவிட்டேன் என் அப்பாவுக்கு நன்றி. படம் முக்கால் வாசி முடிந்திருந்த போது உள்ளே வந்தவர்கள் தான் பிடிஜி. மனோஜ் சார் தான் முதலில் படம் பிஸினசுக்காக பார்க்க வேண்டும் என்றார் பின்னர் முழுப்படத்தையும் தங்கள் தோளில் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள் பிடிஜி பற்றி கேள்விப்பட்ட போது, பிரமிப்பாக இருந்தது. அவர்கள் எங்கள் படத்தை எடுத்துச் செல்வது மகிழ்ச்சி. சாம் சி எஸ் ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்ல ஒரு இயக்குநராகவும் படத்தை அணுகுகிறார் அவருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர்  ஹரீஷ் என்னுடன் நின்றார். அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் அருண் பாண்டியன் சார் மிகவும் அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தார். எல்லாவற்றைப் பற்றியும் கேட்டுக்கொண்டே இருப்பார் அவருக்கு நன்றி. பிரியா அவருக்கு மிக முக்கியமான ரோல் அவர் கேரியரில் முக்கியமான படமாக இப்படம் இருக்கும். என் கோப்ரா படம் சரியான ரிவ்யூ இல்லை.  அந்த நேரத்தில் உடனே என்னைத் தேடி வந்தார் அருள்நிதி சார், தூக்கிப்போடு அடுத்த படம் பண்ணலாம் என்றார். இப்படி ஒரு தோள் கிடைக்க ஆசீர்வாதம் வேண்டும். இப்போது வரை உடன் நிற்கிறார் அவருக்கு என் நன்றிகள். எனக்கு உடன் இருந்த உழைத்த என் குழுவினருக்கு நன்றிகள்.” என்றார். 

 

இப்படத்தில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர்  முதன்மை பாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை டி. குமரேஷ் கவனிக்க,  கலை இயக்கத்தை ரவி பாண்டி மேற்கொண்டிருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் விஜய் சுப்பிரமணியன், R ராஜ்குமார் மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் இப்படத்தை வழங்குகிறார்.

Related News

9408

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery