Latest News :

முன்பதிவில் சாதனைப் படைத்த ஷாருக்கானின் ‘டங்கி’!
Monday December-18 2023

ஷாருக்கான் நடிப்பில், ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டங்கி’ திரைப்படம் வரும் டிசம்பர் 21 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கி வெளிநாடுகளில் சாதனைப் படைத்து வருகிறது.

 

’டங்கி’ படத்தின் முன்பதிவுகள் வெளிநாடுகளில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சாதனை படைத்து வருகிறது. இதன் காரணமாக ஷாருக்கானின் 'பதான்' பின் தங்கியுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு மீண்டும் 'கிங்கான்' ஷாருக் கான் Vs ஷாருக் கான் தான் என்பது உறுதியாகிறது. 

 

ஷாருக்கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர். உள்ளிட்ட திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன் 'டங்கி'யில் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுதி இருக்கிறார்கள். 

Related News

9409

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery