இயக்குநர் என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில், சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘யாவரும் வல்லவரே’. 11:11 புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர்.பிரபு திலக் தயாரித்திருக்கும் இப்படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நந்த குமார், ரித்விகா, சைத்தான் அருந்ததி மேனன், தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஜெய்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். ராமா ராவ் படத்தொகுப்பு செய்ய, சிவா யோகா கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். வெற்றி வீரா சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பொன் முதுவேல், தீப செல்வன், ஆதிரை ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
வரும் டிசம்பர் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இபப்டம் குறித்து தயாரிப்பாளர் டாக்டர்.பிரபு திலக் கூறுகையில், “’வால்டர்’, ’பாரிஸ் ஜெயராஜ்’ படங்களின் பிரமாண்டமான வெற்றியை அடுத்து எங்களின் ’யாவரும் வல்லவரே’ படம் டிசம்பர் 29, 2023 அன்று வெளியாகும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். ஹைப்பர்லிங்க் வடிவில் 4 வெவ்வேறு களங்களில் நடக்கும் சம்பவங்களை, இணைத்து சொல்லும் வித்தியாசமான படைப்பு இது. இயக்குநர் என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி திரைக்கதையை கூறியபோது அவரது ஐடியாவும், படம் குறித்த பார்வையும் மிக வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன். படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு போன்ற திறமை மிக்க நடிகர்களும் இந்தப் படத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.” என்றார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...