அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், சினிமாக்காரன் எஸ்.வினோத்குமார் தயாரிப்பில், உருவாகும் படத்தில் ‘ஜெய்பீம்’, ‘குட் நைட்’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த மணிகண்டன் மற்றும் ‘ஜோக்கர்’ புகழ் குரு சோமசுந்தரம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் சான்வே மேகனா, இயக்குநர் சுந்தர்ராஜன், தனம், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் தன் மானத்திற்காகவும், தன் குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களும், சாகசங்களுமே இத்திரைப்படத்தின் மையக்கருவாகும். மேலும், இக்கதை நம் குடும்பங்களில் நடக்கக்கூடிய நிகழ்வுகளின் அடிப்படையில் நகைச்சுவையும் சுவாரசியங்களும் நிறைந்ததாக அமைந்திருப்பதால் குடும்பங்களிடம் வரவேற்பு பெறும் திரைப்படமாக இருக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் கதையை பிரசன்னா பாலசந்தரன் உடன் இணைந்து இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி எழுதியுள்ளார். திரைக்கதை மற்றும் வசனத்தை பிரசன்னா பாலசந்தரன் எழுதியுள்ளார். சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, வைசாக் இசையமைக்கிறார். கண்ணன் படத்தொகுப்பு செய்கிறார். அபிஷேக் ஸ்ரீனிவாச் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
முழுக்க முழுக்க கோயம்புத்தூரில் படமாக்கப்பட உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...