ரவி முருகையா இயக்கத்தில், விதார்த், பருத்திவீரன் சரவணன், ஜார்ஜ் மரியன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘ஆயிரம் பொற்காசுகள்’. ராமலிங்கம் தயாரித்திருக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் கே.ஆர் தனது கே.ஆர்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.
வரும் டிசம்பர் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘ஆயிரம் பொற்காசுகள்’ படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக தயாரிப்பாளர் கே.ஆர் சலுகை ஒன்றை அறிவித்துள்ளார். அதவாது, இப்படத்தின் முதல் நாள், முதல் காட்சிக்கு ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொரு டிக்கெட் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் குறித்து புதுமை விரும்பி நடிகர் கமல்ஹாசனிடம் தெரியப்படுத்தும் விதமாக தயாரிப்பாளர் கே.ஆர், அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
உயர்திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு....
வணக்கம்... வருகிற 22 ஆம் தேதி "ஆயிரம் பொற்காசுகள்" என்ற நகைச்சுவை படத்தை தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கிறேன். விதார்த் சரவணன் அருந்ததி நாயர் உட்பட பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகின்றனர். மற்ற நடிகர்களின் படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சிக்கே ரசிகர்கள் வருவதில்லை. அதனால் பல தியேட்டரில் காட்சிகள் ரத்து (show break) ஆகிவிடுகிறது. இதனால் ஒன்று இரண்டு நாட்களிலேயே அந்த படம் தூக்கப்பட்டு விடுகிறது. சில படங்கள் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் மூலம் தெரிய வந்தாலும் ரசிகர்கள் படம் பார்க்க வரும்போது படம் இருப்பதில்லை. இத்தகைய கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்திருக்கிறேன். அதாவது அனைத்து தியேட்டர்களிலும் முதல் நாள் முதல் காட்சிக்கு மட்டும் "ஒரு டிக்கெட் வாங்கினால் மற்றொரு டிக்கெட் இலவசம்' என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறேன்.
இது ரசிகர்கள் மத்தியிலும் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
எப்போதுமே திரையுலகில் புதுமைகளை புகுத்தி புரட்சி செய்வதில் முன்னணியில் நிற்பது நீங்கள் தான். திரைத் தொழிலை காப்பாற்றத் துடிக்கும் தங்களுக்கு இதன் அவசியம் கண்டிப்பாக புரியும் என்று நம்புகிறேன். எனவே இந்த முயற்சி ரசிகர்களை சென்றடைந்து முதல் நாள் முதல் காட்சிக்கு கூட்டம் வருமானால் அது மற்ற சிறிய படங்களுக்கும் பேருதவியாக இருக்கும். எனவே இந்த முயற்சிக்கு தாங்கள் ஆதரவு தெரிவித்தால் நிச்சயமாக இந்தப் படம் வெற்றி பெறும். இந்த கான்செப்ட் வெற்றி பெற்றால் அது ஒட்டுமொத்த திரையுலகின் வெற்றியாக உருவெடுக்கும் என்பது உறுதி.
நன்றி நன்றி..
இப்படிக்கு,
கே ஆர்
என்று தெரிவித்திருக்கிறார்.
கே.ஆரின் கடிதத்திற்கு பதில் அளித்திருக்கும் நடிகர் கமல்ஹாசன், “சிறப்பான முயற்சி... தடைகளை உடைத்து வெளிவரும் சிறிய படங்களுக்கு நான் எப்போதுமே ஆதரவாளன் தான். நானும் அப்படி வந்தவன் தான். எதிர்கால நட்சத்திரங்கள் சிறிய படங்களில் இருந்தோ அல்லது பெரிய பட்ஜெட் படங்களில் சிறிய வேடங்களில் நடிப்பதன் மூலமாகவோ தான் உருவாகிறார்கள். சிறியது என்பது அழகானது மட்டுமல்ல நிச்சயமாக ஒருநாள் பெரியதாக வளரக்கூடியது. ஆனால் பெரியது மேலும் பெரியதாகி ஒரு புள்ளியில் நின்று விடும். வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...