Latest News :

’டங்கி’ பட போஸ்டருடன் வீட்டு முன்பு திரண்ட ரசிகர்களை உற்சாகப்படுத்திய நடிகர் ஷாருக்கான்!
Wednesday December-27 2023

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டங்கி’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதோடு, குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாகவும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, அப்படத்தை ரசிகர்கள் கொண்டாடும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

 

அந்த வகையில், ‘டங்கி’ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஷாருக்கானின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், படத்தின் கட்-அவுட், போஸ்டர்களோடு அவரது வீட்டு முன்பு திரண்டனர். இதனைப் பார்த்த ஷாருக்கான், வெளியே வந்து அவர்கள் முன்பு கையசைத்து அவர்களை மேலும் உற்சாகப்படுத்தினார். 

 

தொடர்ந்து உலகம் முழுவதும் அதிகரித்து வரும் டங்கியின் வரவேற்புக்கு இடையே சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை பார்த்து கையசைத்து.. பறக்கும் முத்தத்தை வழங்கி.. தனது மாயாஜால வசீகரத்தை வெளிப்படுத்தினார்.‌ 'டங்கி' திரைப்படத்தின் வெற்றியை... ரசிகர்களும், சூப்பர் ஸ்டாரும் கொண்டாடுவதற்காக ஒன்று கூடினர்.  ஒவ்வொரு ஆண்டும் ஷாருக் கானின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் அவருடைய வீட்டிற்கு முன் திரண்டு வாழ்த்து  தெரிவிப்பர். தற்போது 'டங்கி' படத்தின் வெற்றி ரசிகர்களுக்கு மற்றொரு கொண்டாட்டமாக அமைந்தது.  

 

ஷாருக்கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன் டங்கியில் இணைந்திருக்கிறார்கள். 

 

இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் இணைந்து கதை எழுதியிருக்கிறார்கள். இந்த திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.‌

Related News

9424

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் வெளியான ‘சங்கராந்தி வஸ்துனம்’!
Sunday March-02 2025

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!
Sunday March-02 2025

இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...

இயக்குநர் மோகன்.ஜி - ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் உருவாகும் ‘திரெளபதி 2’!
Sunday March-02 2025

‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...

Recent Gallery