அஜித்தை வைத்து படம் இயக்க இருந்த விக்னேஷ் சிவன், அது நடக்காமல் போக தற்போது ‘லவ் டுடே’ படம் மூலம் நடிகராக பிரபலமடைந்த இயக்குநர் பிரதிப் ரங்கநாதனை நாயகனாக வைத்து படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். ‘எல்.ஐ.சி’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன்ஸ் லலித்குமார் தயாரிக்கிறார். இப்படத்தில் கிரித்தி ஷெட்டி நாயகியாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலேயே இப்படத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் ‘எல்.ஐ.சி’ என்ற தலைப்பு தன்னுடையது என்று இயக்குநரும், இசையமைப்பாளருமான எஸ்.எஸ்.குமரன் கூறியதோடு, தன்னிடம் இந்த தலைப்பை விக்னேஷ் சிவன் தரப்பு கேட்டதற்கு தான் மறுப்பு தெரிவித்த பிறகும், அதை பயன்படுத்தியிருப்பது மிகப்பெரிய மோசடி, என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இது குறித்து அவர் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், விக்னேஷ் சிவனின் ‘எல்.ஐ.சி’ படம் புதிய சிக்கலில் சிக்கியுள்ளது. இதற்கு காரணம், ‘லவ் டுடே’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது, பிரதீப் ரங்கநாதனை நாயகனாகவும், இயக்குநராகவும் வைத்து ‘லவ் டுடே’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், மேலும் ஒரு படத்தை தங்களது நிறுவனத்துக்காக இயக்க வேண்டும் என்று அப்போதே ஒப்பந்தம் போட்டதாம். அதன்படி, ‘லவ் டுடே’ வெளியான பிறகு தங்களுக்கு இயக்க வேண்டிய படம் தொடர்பாக பேசிய போது, அந்த படத்திலும் தானே ஹீரோவாக நடிக்கிறேன், என்று பிரதீப் ரங்கநாதம் கூறினாராம். ஆனால், அது சரிபட்டு வராது, என்று மறுத்த ஏஜிஎஸ் நிறுவனம், வேறு ஒரு ஹீரோவை வைத்து படம் இயக்கும்படி கூறிவிட்டதாம்.
அதற்கு சம்மதம் தெரிவித்த இயக்குநர் பிரதீப் ரங்கநாத, அந்த வேலைகளை கவனிக்காமல், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நாயகனாக நடிக்க தொடங்கி விட்டாராம். இதனால் கடுப்பான ஏஜிஎஸ் நிறுவனம், ஒப்பந்தபடி எங்களுக்கு படம் இயக்கி கொடுத்துவிட்டு பிறகு நீங்க நடிக்கும் படத்தின் வேலைகளை செய்ங்க, என்று கராராக கூறிவிட்டதாம்.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் ‘எல்.ஐ.சி’ படத்திற்கு ஏற்பட்டிருக்கும் புதிய சிக்கலால் இயக்குநர் விக்னேஷ் சிவன் கவலையில் இருக்கிறாராம். அதே சமயம், ஏஜிஎஸ் நிறுவனத்தை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...