ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமாரின் பிரமாண்ட தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை - பாகம் 1’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு பல சர்வதேச விருதுகளையும் வென்றது. இதையடுத்து இரண்டாம் பாகத்திற்காக மக்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், இப்படத்தின் ஒன்று மற்றும் இரண்டாம் பாகத்திற்கு மற்றொரு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
’விடுதலை- பாகம் 1’ மற்றும் ’விடுதலை- பாகம் 2’ ஆகிய இரண்டும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 3 ஆம் தேதிகளில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் 'லைம்லைட் (LIMELIGHT)' பிரிவின் கீழ் திரையிடப்பட இருக்கிறது என்பதை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், நடிகர் விஜய்சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இது குறித்து ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறுகையில், “ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா போன்ற உலகின் மிகவும் மதிப்புமிக்க நிகழ்வுகளில் ’விடுதலை’ படம் மூலம் நமது இந்தியத் திரையுலகைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எங்களுக்கு பெருமையும் மரியாதையும் ஆகும். நன்மதிப்பு பெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் தங்களது படத்தையும் திரையிட வேண்டும் என்பது சினிமாவில் பலருடைய கனவு. இந்த வாய்ப்பு இப்போது எங்களுக்கு கிடைத்திருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்களுக்குக் கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். பல நம்பிக்கையூட்டும் கதைகள் தமிழ் சினிமாவில் வெளிவந்து வெற்றிப் பெற்றுள்ளது. இது சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. இந்த வரிசையில் ‘விடுதலை பார்ட் 1 & பார்ட் 2’ திரைப்படமும் இணைந்திருப்பது எங்களுக்கு எல்லையில்லாத மகிழ்சியைக் கொடுக்கிறது. இந்தப் படத்தில் இயக்குநர் வெற்றிமாறனின் மிடாஸ்-டச் மொழி, பிராந்தியம் போன்ற தடைகளைத் தாண்டி, உலகளவில் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. விஜய்சேதுபதி, சூரி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரின் நிபந்தனையற்ற கடின உழைப்புக்கும் ஆதரவிற்கும் நன்றி” என்றார்.
கடந்த மார்ச் 31, 2023 அன்று வெளியான ’விடுதலை- பாகம் 1’ வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. நடிகர்களின் திறமையான நடிப்பு, இசைஞானி இளையராஜாவின் மாயாஜால இசை மற்றும் சிறந்த தொழில்நுட்பப் பணிகள் என இந்தப் படத்தில் அனைத்தும் அற்புதமாக அமைந்துள்ளது. இந்த வருடம் 2024, கோடை விடுமுறையில் ’விடுதலை- பாகம் 2’ படத்தை உலகம் முழுவதும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...