Latest News :

”பண்டிகையில் வெளியாகும் என் முதல் படம்” - நடிகர் அருண் விஜய் நெகிழ்ச்சி
Monday January-08 2024

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரனின் பிரமாண்ட தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்திருக்கும் ஆக்‌ஷன் திரைப்படம் ‘மிஷன் - சாப்டர் 1’. இதில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருப்பதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

 

இந்த நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விளம்பர நிகழ்ச்சி சென்னையில் உள்ள மாலில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக்கொண்ட படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொண்டார்கள்.

 

நடிகர் அருண் விஜய் படம் குறித்து பேசுகையில், விழாவிற்கு வந்திருக்கும் நாசர் சாருக்கு நன்றி. என் அப்பாவைப் போலதான் இவரையும் பார்க்கிறேன். பண்டிகைக்கு வரும் என்னுடைய முதல் படம் 'மிஷன் சாப்டர் 1' என்பதால் இது எனக்கு இன்னும் ஸ்பெஷல். விஜய் சார் சொன்னது போல இந்தப் படப்பிடிப்பின்  போது மழை, செட் சேதமானது என நிறைய சவால்களை சந்தித்தோம். லண்டன் சிறையை போல இங்கு நாலரை ஏக்கரில் பிரம்மாண்ட செட் அற்புதமாக உருவாக்கினார்கள். ஆர்ட் டிரைக்டருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எல்லா பார்வையாளர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். வேறு மாதிரியான ஒரு ஆக்‌ஷனை இதில் முயற்சி செய்திருக்கிறோம். என்னை வேறு மாதிரி இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். டிரெய்லரில் பார்க்காத பல எமோஷன் படத்தில் இருக்கிறது. ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.” என்றார்.

 

நடிகர் நாசர் பேசுகையில், ”இந்தப் படம் உருவாக முக்கிய மூலகாரணம் விஜய். நான் மதிக்கிற சில இயக்குநர்களில் விஜயும் ஒருவர். இவருடைய படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதனால் அவர் மீது தனி மரியாதை உண்டு. இந்த இளம் தலைமுறை மீது எனக்கு பெரிய நம்பிக்கை உண்டு. புதிது புதிதாக எதையாவது முயற்சி செய்வார்கள். அதே சமயம் அவர்களைப் பார்த்து எனக்கு பயமும் உண்டு. ஏமி ஜாக்சன் இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளை அற்புதமாக செய்துள்ளார்.  படத்திற்காக லண்டன் ஜெயில் செட் அற்புதமாக செய்திருந்தார்கள். ஜிவி பிரகாஷ், ஆண்டனி என சிறப்பான தொழில்நுட்பக் குழு உள்ளது. உங்களைப் போலவே நானும் படத்திற்காக காத்திருக்கிறேன். ஆக்‌ஷன் என்பதையும் தாண்டி படத்தில் அழகான எமோஷன் உள்ளது. தியேட்டரில் படம் பாருங்கள்.” என்றார்.

 

இயக்குநர் விஜய் பேசுகையில், ”விழாவிற்கு வந்ததற்காக நாசர் சாருக்கு நன்றி. மிஷன் படம் எனக்கு ரொம்பவும் முக்கியமானது. படம் உருவாகக் காரணமாக இருந்த ராஜசேகர் சாருக்கு நன்றி. லைகா உள்ளே வந்ததும் படம் இன்னும் பெரிதானது. நான்கு மொழிகளில் வெளியிட வேண்டும் எனச் சொல்லி 'அச்சம் என்பது இல்லையே' என்பதை 'மிஷன் சாப்டர்1' ஆக மாற்றினார்கள். அருண் விஜய் கரியரில் பெரிய பட்ஜெட்டில் உருவான படம் இது. இந்தப் படம் எமோஷனலாக எனக்கு முக்கியமானது. ஏமிக்கு கோவிட் என்பதால் வர முடியவில்லை. சரிதா, ஷோபா போல நிமிஷாவும் முக்கியமான நடிகை. 'மிஷன் சாப்டர்1' படம் ஷூட்டிங்காக லண்டன் சென்றபோது அங்கு குயின் இறந்துவிட்டார். அதனால், அதிகம் ஷூட் செய்ய முடியவில்லை. பின்புதான்  சென்னையில் செட் போட்டோம். பல பிரச்சினைகள் தாண்டிதான் இந்தப் படம் உருவானது. இயலும் ஜிவி பிரகாஷூம் இந்தப் படத்தின் ஆன்மா. இயலுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. படத்தைத் தாண்டி எனக்கும் ஜிவிக்கும் நல்ல நட்பு உள்ளது. விழாவிற்கு அவர் இன்று வரமுடியாத ஒரு சூழல். அவர் சார்பாக எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என் மொத்தக் குழுவுக்கும் நன்றி. பொங்கலுக்கு என் படம் வருவது இதுவே முதல் முறை. 'கேப்டன் மில்லர்', 'அயலான்', 'மெரி கிறிஸ்துமஸ்' என பொங்கலுக்கு வரும் எல்லாப் படங்களும் வெற்றிப் பெற வேண்டும்.” என்றார்.

 

Mission Chapter 1

 

காணொலி வாயிலாக கலந்து கொண்ட நடிகை ஏமி ஜாக்சன் பேசுகையில், ”இந்த வாய்ப்புக் கொடுத்த லைகா புரொடக்சன்ஸ், விஜய் சாருக்கு நன்றி. அருண் விஜய் சாருடன் ஆக்‌ஷன் காட்சிகள் செய்தது எனக்கு மகிழ்ச்சி. கோவையில் நடக்கும் பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களை சீக்கிரம் சந்திக்கிறேன்.” என்றார்.

 

காணொலி வாயிலாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசுகையில், “லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ‘மிஷன் சாப்டர்1’ படத்தின் புரோமோஷன் நடக்கிறது. படத்திற்கு வாழ்த்துகள். அங்கு விழாவில் நானும் இருக்க வேண்டியது. ஆனால், முக்கிய வேலையாக இங்கு ஊருக்கு வந்திருக்கிறேன். அதனால், வரமுடியவில்லை. நிச்சயம் விழாவை மிஸ் செய்வேன். படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள். படம் நிச்சயம் பெரிய வெற்றிப் பெறும்” என்றார்.   

 

நடிகர் அபிஹாசன் பேசுகையில், “படம் ஜனவரி 12 அன்று வெளியாகிறது. உங்களைப் போலவே நானும் ஆவலோடு காத்திருக்கிறேன். விஜய் சார் ஆஃபிஸூக்கு சும்மா போனேன். அவர் என்னைப் படத்தில் நடிக்க வைத்து விட்டார். வாய்ப்புக்கு நன்றி விஜய் சார். படத்தில் யாருக்கும் என்னை அடையாளம் தெரியாது என நினைக்கிறேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள்.” என்றார்.

Related News

9441

சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரார் திரில்லர் ’7G’ ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது!
Tuesday June-25 2024

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி,  இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது...

அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் ’டிஎன்ஏ’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!
Tuesday June-25 2024

ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது...

’கல்கி 2898 கி.பி’ படத்தின் க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியானது!
Tuesday June-25 2024

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் ’கல்கி 2898 கிபி’ படத்தின் பேச்சாகவே இருக்கிறது...