‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷ்ணு விஷால் சொந்தமாக தயாரித்து நடிக்கும் படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். இந்த படத்தை, ‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்’, ’கட்டா குஸ்தி’ , ’எஃப் ஐ ஆர்’ என தொடர்ந்து வெற்றி படங்களை தயாரித்து வரும் விஷ்னு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்ட ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஆர்யன்’ விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது அந்நிறுவனம் அறிவித்துள்ள இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் - புரொடக்ஷன் நம்பர் எண் 10’ என்று அழைக்கபப்டும் இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பிரமாண்டமான ஆக்ஷன் திரைப்படமாக உருவாக உள்ளது.
இப்படத்தின் முதல்கட்ட தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வரும் படங்களின் பணிகள் முடிவடைந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...