Latest News :

மனோஜ் பாஜ்பாய் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘கில்லர் சூப்’!
Monday January-08 2024

‘ரே’, ‘சொஞ்சிரியா’ போன்ற இந்தி திரைப்படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் அபிஷேக் செளபே, இயக்கத்தில் உருவாகியிருக்கும் இணையத் தொடர் ‘கில்லர் சூப்’. பிரபல இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இத்தொடர்,  மைஞ்சூர் என்ற கற்பனை நகரத்தில் நிகழும் பல காதல் சாரம்சங்களை உள்ளடக்கி விறுவிறுப்பான திருப்புமுனைகளை கொண்டு உருவாகியுள்ளது. இதில் மனோஜ் பாஜ்பாயுடன் கொங்கோனா சென்ஷர்மா,  நாசர், சாயாஜி ஷிண்டே, லால், அன்புதாசன், அனுலா நவ்லேகர் மற்றும் கனி குஸ்ருதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

சேட்டனா கெளஷிக் மற்றும் ஹனி ட்ரெஹான் தயாரித்துள்ள இத்தொடர் வரும் ஜனவரி 11 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழில் வெளியாகிறது.

 

இத்தொடர் குறித்து நடிகர் மனோஜ் பாஜ்பாய் கூறுகையில், “எனது கேரியரில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். இரு காதாபாத்திரத்திலும் முற்றிலும் மாறுபட்டு நடிக்கிறேன்.   இயக்குனர் அபிஷேக் சௌபேயின் திறமையும், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் கூட்டணியும், கதையில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் உயிர் கொடுத்த நடித்த  நடிகர்களையும்   நான் நம்பினேன்.  கில்லர் சூப் ஒரு கிரைம் திரில்லர் ஆகும், பல்வேறு சாரம்சங்கள் கொண்ட இந்த சூப் அனைவரும் விரும்பி சுவைக்க கூடியதாகும்” என்றார்.

 

சுவாதி ஷெட்டியாக நடிக்கும் நடிகர் கொங்கனா சென்ஷர்மா கூறுகையில், “சுவாதி ஷெட்டியின் கேரக்டரில் அடியெடுத்து வைப்பது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது, ஏனெனில் அந்தக் கதாபாத்திரம் ஆழம், இருள் மற்றும் நிறைய பஞ்ச்களைக் கொண்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அபிஷேக் சௌபே மற்றும் திறமையான நடிகர்கள் ஆகியோருடன் நீண்ட காலமாக  தொடரில் பணிபுரிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தூங்கும் நகரத்தின் பின்னணியில் நாங்கள் உருவாக்கிய நகைச்சுவையான உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை டிரெய்லர் வழங்குகிறது. தொடர் முழுவதும் சஸ்பென்ஸின் குறிப்புகளுடன், இது உங்களை ஆச்சரியப்படுத்தும்.  'அவள் மாட்டிக்கொள்வாளா, மாட்டாளா, சூப் கொதிக்குமா?' கில்லர் சூப்பைப் பார்க்கும்போது பார்வையாளர்களின் எதிர்வினைக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.

Related News

9443

சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரார் திரில்லர் ’7G’ ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது!
Tuesday June-25 2024

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி,  இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது...

அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் ’டிஎன்ஏ’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!
Tuesday June-25 2024

ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது...

’கல்கி 2898 கி.பி’ படத்தின் க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியானது!
Tuesday June-25 2024

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் ’கல்கி 2898 கிபி’ படத்தின் பேச்சாகவே இருக்கிறது...