தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சினிமாவுக்குள் நுழைந்தவர் நடிகர் கவின். அவர் நடித்த ‘டாடா’ திரைப்படம் வெற்றி பெற்றதால் தற்போது அவரை தேடி பட வாய்ப்புகள் வருகிறதாம். தற்போது இளன் இயக்கத்தில் ‘ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து வரும் கவின், நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படத்திலும், இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று அவரை தங்களது படத்தில் நடிக்க வைக்க அனுகியதும், கவின் தரப்பில் கதை உள்ளிட்ட படம் தொடர்பான விசயங்கள் பற்றி பேசாமல், சம்பளம் பற்றிதான் முதலில் பேசினார்களாம். அதுவும், தற்போது அவர் ரூ.6 கோடி சம்பளம் வாங்குவதாகவும், தற்போது நடித்து வரும் படங்கள் வெளியான பிறகு இந்த தொகை அப்படியே இரண்டு மடங்காகும் என்றும் சொல்லியதோடு, படப்பிடிப்பு சமயத்தில் எப்படிப்பட்ட கேரவேன் பயன்படுத்த வேண்டும், எப்படிப்பட்ட உணவு வகைகள் இருக்க வேண்டும், கவினை அழைத்து வர எந்த மாதிரியான வாகனத்தை அனுப்ப வேண்டும் உள்ளிட்ட பல விசயங்களைப் பற்றி பேசினார்களாம். மேலும், உடனே ரூ.2 கோடி முன் பணம் கொடுக்க வேண்டும், படப்பிடிப்பு தொடங்கிய உடன் பாக்கி தொகையை கொடுக்க வேண்டும், என்று சொன்னார்களாம். இதை கேட்டு தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியில் உரைந்து விட்டார்களாம்.
ஒரு படம் தான் ஓடியது, அந்த வெற்றிக்கும் முக்கிய காரணம் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் தான், அப்படி இருக்க கவின் இப்படி பேராசையில் அலைவது சரியா! என்று புலம்பியபடி தயாரிப்பு நிறுவனம் பின் வாங்கி விட்டதாம். இந்த தகவல் தற்போது கோடம்பாக்கத்தில் தீயாக பரவ, அவரை வைத்து படம் எடுக்க நினைத்தவர்கள் பதற்றத்தில் இருக்கிறார்களாம்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...