Latest News :

”'மிஷன் சாப்டர் 1' படத்தில் பல எமோஷன் உள்ளது” - நடிகர் அருண் விஜய்
Thursday January-11 2024

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரனின் பிரமாண்ட தயாரிப்பில், இயக்குநர் விஜய் இயக்கத்தில், அருண் விஜய் மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிஷன் - சாப்டர் 1’. பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. 

 

இந்த நிலையில், படம் குறித்து கூறிய நடிகர் அருண் விஜய், ”எனது முந்தைய படங்களில் நான் செய்த ஆக்‌ஷன்களை விட இந்தப் படத்தில் ஆக்‌ஷன் இன்னும் அதிகமாக, சிறப்பாக இருக்கும். 'மிஷன் சாப்டர் 1' படத்தில் பல எமோஷன் உள்ளது. பல திருப்பங்களோடு பர்வையாளர்களுக்குப் பிடித்த வகையிலான திரையங்க அனுபவத்தை இந்தப் படம் கொடுத்து உற்சாகப்படுத்தும். இந்தப் படத்தில் பெயருக்காக நாங்கள் எந்த ஆக்‌ஷனையும் சேர்க்கவில்லை. திரைக்கதைக்கு தேவைப்பட்டதுதான் எல்லாம்.  குறிப்பாக, லண்டனில் ஓடும் பேருந்தில் ஒரு ஆக்‌ஷன் பிளாக் ஷாட் உள்ளது. அதில், எனது தசைநார் கிழிந்தது. நான் நிறைய ஸ்டண்ட்களைச் செய்ய வேண்டியிருந்தது. படத்தின் சிறப்பு என்னவென்றால், திரைக்கதை முன்னேற முன்னேற ஆக்‌ஷன் காட்சிகளும் பெரிதாக அதிரடியாக இருக்கும். ஆக்‌ஷனில் எனது சிறந்த திறனை வெளிக்கொண்டு வர இந்தப்படம் மூலம் ஒரு தளம் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.

 

இதயத்தைத் தூண்டும் காதல் கதைகள் மற்றும் உணர்ச்சிகரமான குடும்ப கதைகள் இயக்குவதில் பெயர் பெற்றவர் இயக்குநர் விஜய். நடிகர் அருண் விஜய் அதுகுறித்து பேசியதாவது, “நாங்கள் இருவரும் நிறைய கதைகளைப் பற்றி பேசியுள்ளோம். ஆரம்பத்தில், அவர் தனது பாணியில் ஒரு காதல் கதையை சொன்னார். ஒரு வாரம் கழித்து, உணர்ச்சிப்பூர்வமான பொழுதுபோக்குடன் கூடிய ஆக்‌ஷன் கதை சொல்லி என்னை ஆச்சரியப்படுத்தினார். திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் தற்போதைய மனநிலையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு படத்தில் ஒன்றாக வேலை செய்வோம் என்று அவர் என்னிடம் கூறினார். 'மிஷன் சாப்டர் 1' படத்தில் ஆக்‌ஷன், எமோஷன் மற்றும் செண்டிமெண்ட் ஆகியவை இருக்கும். குறிப்பாக, என் கதாபாத்திரத்திற்கும் மகள் இயலுக்கும் இடையே உள்ள உணர்வுபூர்வமான பிணைப்பு பார்வையாளர்களின் இதயங்களைத் தொடும்.” என்றார்.

Related News

9449

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery