Latest News :

’டி.என்.எஸ்’ கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
Saturday January-20 2024

தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமாவையே தனது நடிப்பு மூலம் திரும்பி பார்க்க வைத்த நடிகர் தனுஷ், தமிழ்ப் படங்களில் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நாகர்ஜுனா மற்றும் பிரபல இயக்குநர் சேகர் கம்முலா ஆகியோருடன் நடிகர் தனுஷ் கைகோர்த்திருக்கும் படத்தை சுனில் நரங் மற்றும் புஸ்குஅர் ராம் மோகன் ஆகியோர், ஸ்ரீ நாராயண் தாஸ் கே நரங்கின் ஆசீர்வாதத்துடன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி (ஏசியன் குழுமத்தின் ஒரு பிரிவு) நிறுவனம் சார்பில், அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து, சோனாலி நரங் வழங்க பிரமாண்டமாக தயாரிக்கப்படுகிறது.

 

தனுஷ், நாகர்ஜுனா மற்றும் இயக்குநர் சேகர் கம்முலா ஆகியோரது பெயர்களின் சுருக்கமாக ‘டி.என்.எஸ்’ என்று அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு பிரமாண்ட பூஜையுடன் நேற்று தொடங்கியது. இதில், சுனில் நரங், புஸ்குர் ராம் மோகன் ராவ், பாரத் நரங், ஜான்வி நரங் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

 

தனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முறையே அவர்களின் சங்கராந்தி வெளியீடுகளான கேப்டன் மில்லர் (தமிழ்) மற்றும் நா சாமி ரங்கா மூலம் பிரமாண்ட வெற்றியை வழங்கியதால், இந்த முன்னணி நடிகர்கள் இணையும் பிரம்மாண்டமான காவியத்தைப் பற்றிய உற்சாகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.  இரு நட்சத்திரங்களின் ரசிகர்களும் அவர்கள் திரையை ஒருசேர பகிர்ந்து கொள்வதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக இப்படத்தில் நடிக்கிறார்.

 

ஃபிடா மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய இரண்டு தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த பிறகு, சேகர் கம்முலா பெரிய அளவிலான படைப்புடன் வருகிறார். தொழில்நுட்ப அம்சங்களிலும் படம் உறுதியுடன் சிறந்து விளங்கும்.

 

நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, ராமகிருஷ்ணா சப்பானி மற்றும் மோனிகா நிகோத்ரே ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பைக் கவனிக்க, சர்வதேச சண்டைப்பயிற்சி இயக்குநரான யானிக் பென் ஆக்‌ஷன் பகுதியை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளார்.

 

படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Related News

9460

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery