Latest News :

’விடுதலை - பாகம் 1’ படத்திற்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரம்!
Tuesday January-23 2024

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில், ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் பிரமாண்டமாக தயாரித்த படம் ‘விடுதலை - பாகம் 1’. இப்படம் வெளியாகி உலகளவில் வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், இதனுடன் சேர்ந்து இதன் இரண்டாம் பாகமும் பல்வேறு விருது விழாக்களில் பங்கேற்று பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.

 

விடுதலை - பாகன் 1 வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், வரும் ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற இருக்கும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விடுதலை’ பாகம் 1&2 திரையிடப்பட தேர்வாகி மிகப்பெரிய அங்கீகாரம் பெற்றிருக்கிறது.

 

இந்த நிலையில், மற்றொரு அங்கீகாரமாக புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘விடுதலை - பாகம் 1’ திரைப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றது. இது படக்குழுவினரையும், ரசிகர்களையும் மகிழ்ச்சியில்  ஆழ்த்தியுள்ளது.

 

ரசிகர்களிடம் மட்டும் இன்றி சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு அங்கீகாரங்களை பெற்று வரும் ‘விடுதலை - பாகம் 1’ போல், ‘விடுதலை - பாகம் 2’ படத்தையும் மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related News

9469

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery