தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று பல மொழிகளில் நடித்து வரும் மிர்னா, ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து கவர்ந்தார். அப்படத்தை தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தாலும் கதை தேர்வில் கவனம் செலுத்தி வந்தவர் தற்போது ‘பெர்த் மார்க்’ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.
ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் மிர்னா மற்றும் ஷபீர் கல்லாரக்கல் முதனை வேடத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர்.வரலகஹ்மி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இப்படம் குறித்து இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் கூறுகையில், “ஜெனி என்ற கதாபாத்திரத்தில் ஏழு மாத கர்ப்பிணியாக மிர்னா நடித்திருக்கிறார். அவரை சுற்றிதான் கதை நகரும். ஜெனி என்ற கதாபாத்திரத்திற்கு நன்றாகத் தெரிந்த, திறமையான ஒரு நடிகையைத் தான் தேடிக் கொண்டிருந்தோம். அதில் மிகச் சரியாக மிர்னா பொருந்தினார். கடுமையாக உழைக்க கூடியவர் அவர். என்ன காட்சி எடுக்கப் போகிறோம், என்பது குறித்து அவர் எப்போதும் தெளிவாக இருப்பார். படப்பிடிப்பு என்றால் கதைக்கான மனநிலைக்கு வந்துவிடுவார். ஜெனிக்கு அவரை தவிர வேறு யாரும் பொருந்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். மலையாளத்தில் ‘பிக் பிரதர்’, தமிழில் ‘புர்கா’, ‘ஜெயிலர்’, தெலுங்கில் ‘நா சாமி ரங்கா’, ‘உக்ரம்’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றிருந்தாலும், இந்த படங்களில் பார்க்காத மிர்னாவை நிச்சயம் ‘பெர்த் மார்க்’ படத்தில் பார்க்கலாம்.
இயக்குநர், ஹீரோ என நாங்கள் எல்லோரும் எந்த அளவிற்கு உழைப்பைக் கொடுத்துள்ளோமோ அந்த அளவிற்கு மிர்னாவும் கொடுத்துள்ளார். ஏழு மாதம், ஒன்பது மாத கர்ப்பம் என்பதால் கனமான புரோஸ்தெடிக் செய்து கொடுத்தோம். அதை எல்லாம் தாங்கிக் கொண்டு, சிறப்பாக நடித்தார். அவருடைய நடிப்பு இந்த படத்தில் மேலும் மெருகேறி இருக்கும். மக்களுக்கு நிச்சயம் அவரது நடிப்பு பிடிக்கும்.” என்றார்.
விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்ய, இ.இனியவன் பாண்டியன் படத்தொகுப்பு செய்துள்ளார். அனுசுயா வாசுதேவன் கூடுதல் திரைக்கதை அமைத்திருக்கிறார். ஸ்ரீராம் சிவராமன், விக்ரம் ஸ்ரீதரன் கதை எழுதி தயாரித்திருக்கிறார்கள்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...