’காளை’, ’பரதேசி’, ’முனி’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்த வேதிகா, தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது ‘பியர்’ (Fear) என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார்.
சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் திரைப்படமான இப்படம் குறித்து நடிகை வேதிகா கூறுகையில், “இது மிகவும் அருமையான கதை. எந்த மாதிரியான படமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரம் குறித்து நிறைய தயாரிப்புகள் இருக்க வேண்டும். இந்த கதாபாத்திரம் குறித்து நிறைய கற்றுக் கொண்டேன். எனது மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது போது ஃபியர் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லர். இப்படத்தில் என்னை சுற்றித்தான் அனைத்து விஷயங்களும் நிகழும். பர்ஃபாம் செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளது. தற்போது தான் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. தனக்கு என்ன வேண்டும் என்பதில் இயக்குனர் மிகவும் தெளிவாக உள்ளார். இப்படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.” என்றார்.
வேதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ஜெயபிரகாஷ், அனீஷ் குருவில்லா, சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
அனுப் ரூபென்ஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு அண்ட்ரூ ஒளிப்பதிவு செய்கிறார்.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...