பிரசாந்த் வர்மா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ஹனுமான்’ படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
‘ஹனுமான்’ திரைப்படத்தின் முடிவில் அதன் இரண்டாம் பாகமான ‘ஹெய் ஹனுமான்’ பற்றி அறிவித்திருந்த இயக்குநர் பிரசாந்த் வர்மா, அதற்கான திரைக்கதையை ஏற்கனவே முழுமையாக தயார் செய்து விட்டார். பிரமாண்டமான ஃபேண்டஸி உலகில், சூப்பர்மேன் சாகச கதைகளைச் சொல்லும் இப்படம், உலகத்தரத்தில் மிகப்பெரிய பொருட்ச்செலவில் புதுமையான திரை அனுபவத்தை வழங்கும் விதத்தில் உருவாக உள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ஹனுமான் கோவிலில் நடந்த யாகத்தில் பங்கேற்ற இயக்குநர் பிரசாந்த் வர்மா, படத்தின் திரைக்கதை புத்தகத்தை அனுமன் சிலையின் முன் வைக்கப்பட்டு, இத்திரைப்படத்திற்காக ஆசீர்வாதம் வாங்கினார்.
‘ஜெய் ஹனுமான்’ பற்றிய மற்ற தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...