Latest News :

ஜெயம் ரவியின் ‘சைரன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Tuesday January-23 2024

அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் கமர்ஷியல் திரைப்படம் ‘சைரன்’. ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.  மேலும், ஜெயம் ரவி இப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

இந்த நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி ‘சைரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

 

ஒரு ஜெயில் கைதியாக இருக்கும் ஜெயம் ரவி பரோலில் வெளியில் வந்த பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாக காட்டிய டீசர் கதை பற்றிய சிறு அறிமுகத்தை தந்தது. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் ட்ரெய்லரை,  விரைவில் படக்குழு வெளியிடவுள்ளது. இதுவரையிலான ஜெயம்ரவி படங்களிலிருந்து மாறுபட்டதாகத் தெரியும் சைரன் படத்தின் மீது இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

 

இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் ’சைரன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். 

 

Siren Poster

 

மிகப்பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள்  நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில்  நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

Related News

9473

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் வெளியான ‘சங்கராந்தி வஸ்துனம்’!
Sunday March-02 2025

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!
Sunday March-02 2025

இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...

இயக்குநர் மோகன்.ஜி - ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் உருவாகும் ‘திரெளபதி 2’!
Sunday March-02 2025

‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...

Recent Gallery