Latest News :

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘அரிமாபட்டி சக்திவேல்’!
Wednesday January-24 2024

அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் சமூக திரைப்படமாக உருவாகும் படம் ‘அரிமாபட்டி சக்திவேல்’. லைப் சைக்கல் கிரியேஷன்ஸ் சார்பில் பவன் கே.மற்றும் அஜிஸ்.பி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், கரு.பழனியப்பன் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

 

திருச்சி அருகே ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமமே தங்களுக்கு என்று ஒரு கட்டுபாட்டை வரையறுத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஊரில் உள்ள ஒருவன் அந்த கட்டுப்பாட்டை மீறும்போது நாயகனுக்கும்  ஊருக்கும்,  நடக்கும் வாழ்வியல் போராட்டங்களை  மையக்கருவாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.

 

இயக்குநர் கரு பழனியப்பன் உதவியாளராக பணியாற்றிய,  ரமேஷ் கந்தசாமி இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சமூகத்தின் மறுபக்கத்தை ஏற்றத்தாழ்வுகள் மிக்க மனிதனின் முகத்தை தோலுரித்து காட்டும் படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர்.      

 

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சார்லி நடித்துள்ளார். நாயகனாக புது முகம் பவன்.கே நடிக்க, நாயகியாக மலையாள நடிகை மேகனா எலேன் நடித்துள்ளார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, சூப்பர் குட் சுப்ரமணி, கராத்தே வெங்கடேஷ், ஹலோ கந்தசாமி, பிர்லா போஸ், அழகு, செந்தி குமாரி உட்பட மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து இருகிறார்கள்.

 

அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய,  அம்பேத்கரும், பெரியாரும் இன்னும் மாறாத சமூகத்தை பரிதாபத்துடன் கவனிக்கும் குறியீடாக,  சிறைக்கம்பிகளுக்கு வெளியில் நின்று, கிராமத்தின் பஞ்சாயத்தை கவனித்து பார்க்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், படம்  சொல்ல வரும் கருத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திவிடுகிறது. மாறுபட்ட வகையில் அமைந்துள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக்கை, ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.            

 

இப்படத்தின் படப்பிடிப்பு அரியலூர் மற்றும் சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

 

பவன்.கே கதை, திரைக்கதை, வசனம் எழுத, ரமேஷ் கந்தசாமி இயக்கும் இப்படத்திற்கு ஜெ.பி.மேன் ஒளிப்பதிவு செய்கிறார். மணி அமுதவன் பாடல்கள் எழுதி இசையமைக்க, ஆர்.எஸ்.சதிஷ்குமார் படத்தொகுப்பு செய்கிறார். கபாலி கதிர்.கே கலை இயக்குநராக பணியாற்ற, பில்லா ஜெகன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். 

Related News

9476

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery