Latest News :

ஒரே வருடத்தில் தொடர்ந்து 3 வெற்றி படங்கள்! - தொடரும் ஷாருக்கானின் சாதனைப் பயணம்!
Thursday January-25 2024

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் ஷாருக்கான், கடந்த 2023 ஆம் ஆண்டில் தனது ஒவ்வொரு படங்களின் மூலமாக மிகப்பெரிய வசூல் சாதனை படைத்ததோடு, பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி பார்வையாளர்களையும், திரையுலகினரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

 

இந்த நிலையில், ’பதான்’ வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையிலும்,  ஷாருக்கானின் ‘ஜவான்’, ‘டங்கி’ என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை வழங்கியதால் அவரது ரசிகர்கள் ஷாருக்கின் படங்களை நினைவுக்கூறுகிறார்கள். 

 

பதானுக்கு பிறகு ஷாருக்கான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜவானை வழங்கினார். இது ஒரு மெகா பான் இந்திய பிளாக் பஸ்டராக மாறியது. பவர் பேக் ஆக்ஷனுடன் கூடிய ஷாருக்கானின் கதாபாத்திரத்தையும் அவரது திரை தோற்றத்தையும் இதற்கு முன் ரசிகர்கள் பார்த்ததில்லை. ஜவானும் பல சாதனைகளை முறியடித்தது. ₹1,148.32 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, அதிக அளவில் வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்தது. 

 

தொடர்ந்து இரண்டு அதிரடி ஆக்சன் பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை வழங்கிய பிறகு ஷாருக்கான் மனதைக் கவரும் மகத்தான படைப்பான 'டங்கி'யை வழங்கினார். இந்த படத்தின் மூலம் மில்லியன் கணக்கிலானவர்களின் இதயங்களை தொட்டார். திரையரங்குகளுக்கு குடும்ப பார்வையாளர்களின் பெருங்கூட்டத்தை ஈர்த்தார். அத்துடன் வெளிநாட்டில் வாழும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை தாயகம் திரும்பும் உணர்வையும் தூண்டினார். இத்திரைப்படம் இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. டங்கி திரைப்படம் உலகம் முழுவதும் இது வரை 450 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது. 

 

'பதான்', 'ஜவான்', 'டங்கி' ஆகிய படங்களின் மூலம் ஒரே வருடத்தில் ஹாட்ரிக் பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்து ஷாருக்கான் சாதனை படைத்திருக்கிறார். 2023 ஆம் ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்ற ஐந்து படங்களில் மூன்று படங்கள் ஷாருக்கான் நடிப்பில் வெளியானவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இத்தகைய சாதனையை படைத்த ஒரே நடிகர் என்ற புதிய சாதனையை படைத்திருக்கும் ஷாருக்கான், தனக்கு தான் தான் மிகப்பெரிய போட்டியாளர் என்பதை மீண்டும் நிரூபித்து மற்றொரு புதிய சாதனையை நிகழ்த்தியிருப்பதோடு, தனது சாதனைப் பயணத்தை தொடர்கிறார்.

Related News

9477

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் வெளியான ‘சங்கராந்தி வஸ்துனம்’!
Sunday March-02 2025

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!
Sunday March-02 2025

இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...

இயக்குநர் மோகன்.ஜி - ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் உருவாகும் ‘திரெளபதி 2’!
Sunday March-02 2025

‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...

Recent Gallery