இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரணி, உடல் நலக்குறைவால் இன்று மாலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 5 மாதங்களாக இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரணி, இன்று மாலை 5.20 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 47.
பவதாரணி மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பல அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பவதாரணியின் உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.
பவதாரணிக்கு திருமணமாகிவிட்டது. அவரது கணவர் விளம்பர நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...