அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'ரெபல்'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி, ஆதித்யா பாஸ்கர், 'கல்லூரி' வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார்.
உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வரும் மார்ச் மாதம் 22 ஆம் தேதி ‘ரெபல்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இது தொடரபாக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக வீடியோவில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மற்றும் அதிரடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...