திரைப்படங்களை உருவாக்குவது கடினமாக இருந்த காலம் கடந்து தற்போது திரைப்படங்களை உருவாக்குவது மிக எளிது, ஆனால் அதை வெளியிடுவதும், மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் தான் மிக மிக கடினமானதாகிவிட்டது. இந்த கடினத்தை எளிதில் கடந்து விடலாம் என்ற நம்பிக்கையை ஒடிடி என்ற தளம் உருவாக்கி கொடுத்தது. ஆனால், அதுவும் இப்போது இல்லை. வழக்கம் போல் திரையரங்குகளில் வெளியாகி மக்களின் ஆதரவு பெற்ற பிறகே அந்த படங்களுக்கு ஒடிடி மவுசு கிடைக்கிறது. இத்தகைய சூழலில் ஒரு திரைப்படம் வெற்றி பெறுவது என்பது மிக...மிம...கடினம் என்றாலும், இந்த கடினமான சூழலிலும் பல படங்கள் வெற்றி பெற்று வருகிறது.
அந்த வகையில், கடந்த வாரம் வெளியான திரைப்படங்களில் ஒன்றான ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனை படக்குழு இன்று நட்சத்திர ஓட்டலில் கேக் வெட்டி கொண்டாடியது. இந்த நிகழ்வில் படக்குழுவினரோடு, பத்திரிகையாளர்களும் கலந்துக்கொண்டார்கள்.
வழக்கம் போல் நிகழ்ச்சியில், பலர் பலவிதமாக பேசி தங்களது மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் தெரிவித்தார்கள். குறிப்பாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் பா.இரஞ்சித், ஒரு தகவலை பகிர்ந்துக்கொண்டார். அதை மட்டும் இங்கே பதிவிட்டால், இந்த படம் உண்மையாகவே வெற்றி பெற்றிருக்கிறது, என்பதை உலகம் அறிந்துக்கொள்ளும் என்று நினைக்கிறோம்.
அதாவது, பா.இரஞ்சித் பேசுகையில், “படம் ரீலிசாகி நான்கு நாட்களில் ஒரு பெரிய ஹீரோ அப்படத்தை இரண்டு முறைப் பார்த்துவிட்டு, போன் செய்து நாம் ஒரு படம் பண்ணலாம் என்று ஜெயக்குமாரிடம் பேசியிருக்கிறார். இது எனக்குக் கூட நடந்தது இல்லை. ஜெயக்குமாருக்கு நடந்திருப்பது எனக்கு சந்தோசம்.” என்று தெரிவித்தார்.
தற்போதைய தமிழ் சினிமா ஹீரோக்கள் கையில் இருந்தாலும், அந்த ஹீரோக்களுக்கான சரியான கதை மற்றும் அதை காட்சி மொழியில் கொடுக்கும் திறன் இயக்குநர்கள் கையில் இருந்தாலும், அப்படிப்பட்ட இயக்குநர்களை அடையாளம் காணுபவர்களாக முன்னணி ஹீரோக்கள் இருக்கிறார்கள். அப்படி ஒரு முன்னணி ஹீரோ ‘ப்ளூ ஸ்டார்’ பட இயக்குநர் எஸ்.ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு ”தனக்கான கதை இருக்கிறதா?” என்று கேட்டு டிக்கடித்திருப்பதால், ‘ப்ளூ ஸ்டார்’ டாப் ஸ்டார் தான்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...