எஸ்.ஆர் பிலிம் பேக்டரி சார்பில் எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘இ-மெயில்’. இதில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகை ராகிணி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, ‘முருகா’ அசோக் கதாநாயகனாக நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக போஜ்புரி மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது நாயகனாக ஆதவ் பாலாஜி நடித்திருக்கிறார். இவர்களுடன் மறைந்த நடிகர் மனோபாலா, லொள்ளு சபா மனோகர், வனிதாஸ்ரீ, அக்ஷய் ராஜ், ‘ஆரஞ்சு மிட்டாய்’ பிரபா உள்லிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஆன்லைன் விளையாட்டுக்களில் நடக்கும் மோசடிகளையும், அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளில், வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்க தலைவர் கே.ராஜன், படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்த்துவிட்டு, “சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை பிரமாண்டமான முறையில், ரசிகர்கள் விரும்பும் வகையில் அதிக பொருட் செலவில் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். நிச்சயம் இந்த படம் மக்களை கவரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்படத்தின் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பால், இப்படத்தை வெளியிட பல திரையரங்கங்கள் விருப்பம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை சுமார் 250 திரையரங்களில் இப்படம் வெளியாக இருக்கும் நிலையில், வெளியீட்டு தேதி நெருங்கும் போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...