தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் ‘விஸ்வம்பரா’ படம் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்படுகிறது. சில நாட்களுக்குப் முன்பு இப்படத்திற்காக அமைக்கப்பட்ட பிரமாண்டமான செட்டில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு சிரஞ்சீவில் கலந்துக்கொண்ட நிலையில், இப்படத்திற்காக மேலும் 13 பிரமாண்டமான செட்களை படக்குழு அமைத்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் தகவலை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இன்று நடைபெற்ற இப்படப்பிடிப்பில் நடிகை திரிஷா கலந்துக்கொள்ள, அவரை நடிகர் சிரஞ்சீவி, இயக்குநர் வசிஷ்டா, தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
முன்னதாக நடிகை திரிஷா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் ‘ஸ்டாலின்’ படத்தில் பணிபுரிந்துள்ளார். தற்போது மெகா மாஸ் ஃபேண்டஸி உலகை காட்டும் ’விஸ்வம்பரா’ படத்தில், சிரஞ்சீவியுடனான மேஜிக் கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் மீண்டும் எதிர்பார்க்கலாம்.
யுவி கிரியேஷன்ஸ் சார்பில் விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், சிரஞ்சீவி திரை வாழ்க்கையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளர்களாக பணியாற்றவுள்ளனர். ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் பாடலாசிரியர்களாகவும், ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா ஆகியோர் இணை திரைக்கதையாசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.
2025 ஆம் ஆண்டு சங்கராந்தி கொண்டாட்டமாக ஜனவரி 10 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...