‘எதிர் நீச்சல்’, ‘வணக்கும் சென்னை’, ‘வை ராஜா வை’ என்று தொடர் படங்களை கொடுத்து வந்த பிரியா ஆனந்த், திடீரென்று சில மாதங்கள் காணாமல் போன நிலையில், சமீபத்தில் வெளியான ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் மூலம் மீண்டும் கோடம்பாக்கத்தின் முழு வெளிச்சத்தையும் தன் மீது பட வைத்துள்ளார்.
“இனி நடிக்க கூடாது என்று இருந்த எனது முடிவு மாற்றும் வகையில் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ கதை இருந்தது” என்று பேட்டியில் பிரியா ஆனந்த் கூறியது, வெறும் வாய் வார்த்தை அல்ல, என்பதை அப்படமும், அப்படத்தில் பிரியா ஆனந்தின் கதாபாத்திரமும் நிரூபித்து விட்டது. தற்போது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கும் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை பார்ப்பவர்கள் பிரியா ஆனந்தை வாழ்த்த தவறுவதில்லை, அந்த அளவுக்கு தனது ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவருக்கு பாராட்டுக்களுடன் பட வாய்ப்புகளும் குவிந்து வருவதால், குஷியடைந்துள்ளவர் கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருவதோடு, இது போன்ற சமூக கருத்துக்களை மக்களுக்கு சொல்லும் படங்களில் நடிக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...