Latest News :

’1 டிக்கெட் 4 படம்’ வரிசையின் கடைசி படத்தை ஜனவரி 14 ஆம் தேதி ஒளிபரப்பும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!
Tuesday February-06 2024

இந்தியாவின் முன்னணி ஒடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்,  ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாக 1 டிக்கெட் 4 படம் எனும், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் தற்போது நான்கு புதிய சூப்பர்ஹிட் திரைப்படங்களை பார்த்து ரசிக்க முடியும். இந்த நான்கு படங்களின் தொகுப்பு,  டிசம்பர் 30 அன்று ’பார்க்கிங்’ திரைப்படம் மற்றும் ஜனவரி 15 இல் ’ஜோ’ திரைப்படத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து ஜனவரி 27 முதல் ’ஃபைட் கிளப்’ ஒளிபரப்பு  செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய திட்டத்தின்  இறுதிப் படமாக ‘சபா நாயகன்’ படத்தினை பிப்ரவரி 14 ஆம் தேதியன்று ஒளிபரப்பு செய்ய உள்ளது. 

 

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்  இயக்கத்தில் உருவான பரபரப்பான த்ரில்லர் திரைப்படம் 'பார்க்கிங்', இது டிசம்பர் 30 முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது, இப்படத்தில் முன்னணி நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் M S பாஸ்கர் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர், இப்படம் ஈகோ அதிகமிருக்கும்  இரண்டு மனிதர்களைச் சுற்றி, ஒரு கார் பார்க்கிங் இடத்திற்காக நிகழும் பிரச்சனையை   யதார்த்தமான சம்பவங்களுடன் பரபரப்பாகச் சொல்கிறது.  

 

ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா த்ரிகா ஆகியோர்  நடிப்பில், இயக்குநர் எஸ்.ஹரிஹரன் ராமின் இயக்கத்தில் காதல் பொழுதுபோக்கு திரைப்படம் 'ஜோ', இப்படம் ஜனவரி 15 முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது.

 

ஜோ  (ரியோ) எனும் இளைஞனின் வாழ்வும் அவனது காதலும், அவன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளையும் பற்றிய கதைதான் இந்தப்படம். இப்படம் ஜோவின் வாழ்வில் குறுக்கிடும் இரு பெண்கள் பற்றியது. முதல் பாதி கல்லூரியில் காதலிக்கும் பெண்ணைப் பற்றியதாக இருந்தாலும், அடுத்த பாதி வாழ்க்கையின் பிற்பகுதியில் அவன் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணைப் பற்றியதாக அமைந்துள்ளது.

 

நடிகர்கள் விஜய் குமார் மற்றும் மோனிஷா மோகன் மேனன் நடிப்பில் இயக்குநர் அப்பாஸ் A ரஹ்மத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் படம் ஃபைட் கிளப். வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் இளைஞர்களின் நட்பு, நம்பிக்கை, துரோகம் மற்றும் அவர்கள் நிலத்தின் பிரச்சனைகள்  மீது வெளிச்சம் பாய்ச்சும்  தீவிரமான கதையை இப்படம் பேசுகிறது. 

 

அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி சௌத்ரி ஆகியோர்  நடிப்பில், இயக்குநர்  சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான லைட் ஹார்ட் ரொமாண்டிக் என்டர்டெய்னர் திரைப்படம்  ’சபா நாயகன்’. ரசிகர்கள்  முகத்தில் புன்னகையை வரவழைக்கும் ஒரு ஃபீல் குட் ரொமான்டிக் காமெடிப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

Related News

9502

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் வெளியான ‘சங்கராந்தி வஸ்துனம்’!
Sunday March-02 2025

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!
Sunday March-02 2025

இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...

இயக்குநர் மோகன்.ஜி - ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் உருவாகும் ‘திரெளபதி 2’!
Sunday March-02 2025

‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...

Recent Gallery