Latest News :

’லால் சலாம்’ பேசும் அரசியல் என்ன? - இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதில்
Tuesday February-06 2024

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘லால் சலாம்’. ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, நிரோஷா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சிறப்பு தோற்றம் ஒன்றில் தோன்றுகிறார்.

 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.பிரவின் பாஸ்கர் படத்தொகுப்பு செய்திருக்கிறார். 

 

வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘லால் சலாம்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைவர் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது.

 

நிகழ்வில் படம் குறித்து பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “ஒரு ஊரில் நடக்கும் தேர்த் திருவிழா அதையொட்டி நடக்கும் கிரிக்கெட் போட்டி அந்த போட்டியில் நடக்கும் பிரச்சனைகளை சார்ந்து இந்த படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. விளையாட்டு வினையானால் எங்கு போய் முடியும் என்பதை இந்த படம் பேசுகிறது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் கதாசிரியர் தன்னிடம் இரண்டு கதைகளை கூறினார், அதில் ஒன்று தான் ’லால் சலாம்’. இந்தப் படம் மக்களைச் சார்ந்த ஒரு சிறிய அரசியல் கருத்தை பேசுகிறது. குடிமகனாக இருக்கக்கூடிய அனைவருக்கும் அரசியலுடன் ஒரு பங்கு உள்ளது, அரசியல் இல்லாமல் எந்த நாடும் ஜனநாயகமும் இயங்க முடியாது. அரசியல் என்பது எல்லாத்திலும் உள்ளது அதை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் எல்லாமே உள்ளது. படத்தில் பணியாற்றிய மூத்த கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கும் தன்னுடைய சக தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பத்திரிக்கை  மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் விக்ராந்த் பேசுகையில், “தனது சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது போதும் என்று இருக்கும் பொழுது இந்த வாய்ப்பு வந்தது. அப்பொழுது தான் தனக்கு இன்னும் திரைப்பயணம் இருக்கிறது, இது கடவுள் கொடுத்த பரிசு என்று மகிழ்ச்சியடைந்தேன். இந்த வாய்ப்பு வழங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுடன் இந்த படத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருந்தது. தன்னுடன் நடித்த மூத்த கலைஞர்கள் மற்றும் சக கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பு தொடர்பாக நிறைய ஆலோசனை கொடுத்தார், நல்ல ஊக்கம் அளித்தார்.” என்றார்.

 

நடிகர் விஷ்ணு விஷால் பேசுகையில், “15 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவு செய்த தருணத்தில் இந்த படம் தனக்கு ஒரு பரிசாக கிடைத்திருக்கிறது.  'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுடன் பலரும் நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர் நடிக்கும் படத்தில் அவருக்கு கீழ் ஒரு கதையின் நாயகனாக நடிப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இக்கால கட்டத்திற்கு தேவையான கருத்தை கிரிக்கெட் மூலமாக இப்படம் பதிவு செய்திருக்கிறது. ஒரு இயக்குனராக இந்த கருத்தை படமாக்குவதும் அப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற மிகப்பெரிய ஆளுமை இருப்பதும் மிகுந்த சவால் அளிக்கும் விஷயமாகும். அதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் திறம்பட செய்து முடித்திருக்கிறார். பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

 

நடிகை நிரோஷா  பேசுகையில், “ரஜினிகாந்த் அவர்களுடன் நடிக்க ஏற்கனவே வாய்ப்பு வந்தது. கடைசி நேரத்தில் அது நடைபெறாமல் போனது. அதனால் தனது திரை வாழ்க்கை ஒரு முழுமை பெறாமல் இருந்தது, இந்த திரைப்படம் மூலமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் தனக்கு நல்லதொரு வாய்ப்பை கொடுத்துள்ளார். இயக்குனராக தனக்கு என்ன தேவையோ அதை மிகவும் தெளிவுடன் நடிகர்களிடம் இருந்து சிறப்பான ஒரு நடிப்பை பெற்றுக் கொள்வார். முதல்முறையாக 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுடன் நடிப்பது  மிகவும் பெருமையாக இருக்கிறது. நகைச்சுவை  கதாபத்திரமாக மட்டும் இல்லாமல், இந்த படத்தில் குணச்சித்திரத்துடன் கூடிய நகைச்சுவை கதாபாத்திரமும் கொடுத்துள்ளார்கள். ஒரு திரை பல்கலைக்கழகத்தில் நுழைந்து வந்த அனுபவத்தை இந்த படம் கொடுத்திருக்கிறது. அந்த அளவிற்கு அத்தனை கலைஞர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன்.” என்றார்.

 

நடிகர் விவேக் பேசுகையில், “படத்தில் ஏதாவது பிரச்சனை இருக்குமா என்று தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பிரச்சினை இருக்கக் கூடாது என்பதுதான் படத்தின் கரு.அதை பார்த்துவிட்டு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களாகிய நீங்கள் கொடுக்கும் விமர்சனம் ஆழமாகவும் அழுத்தமாகவும் இருக்கும்.இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கும் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

 

Lal Salaam Press Meet

 

நடிகர் தம்பி ராமையா பேசுகையில், “தமிழ்நாட்டிலும் இந்து, முஸ்லீம்,கிறிஸ்துவம் என மதங்கள் மூன்றாக இருக்கலாம், ஆனால் மனித மனங்கள் ஒன்றாக இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமியின் கதைக்கு கிரிக்கெட்டை மையப்படுத்தி சிறப்பான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். குடும்பத்துடன் வந்து ரசிக்கும் ரசிகர்களுக்கான உணர்வுப் பூர்வமான காட்சிகளுடன் படம் உருவாகி உள்ளதாக கூறினார்.படத்தில் நடிக்க தனக்கும் வாய்ப்பளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி.” என்றார்.

 

நடிகர் செந்தில் பேசுகையில், “அருமையான கதையை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் உருவாக்கி உள்ளதாகவும், அவர் கதையை கூறும் பொழுது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்ததாகவும் படத்தில் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்த சக கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

Related News

9506

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’!
Thursday January-09 2025

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...

Recent Gallery