‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ் யு. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை எச்.ஆர் பிக்சரஸ் நிறுவனம் சார்பில் ஷிபு தமீன்ஸ் மகள் ரியா ஷிபு தயாரித்து வருகிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு தற்காலிக தலைப்பாக ‘சீயான் 62’ என்று வைக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படம் பற்றிய புதிய தகவல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், இப்படத்தில் மிக முக்கியமான, இதுவரை நடித்திராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்பது தான்.
சமீபகாலமாக, எந்த வேடம் கொடுத்தாலும், அதில் தனது அதீத நடிப்பு திறமையை காட்டி அசத்தும் எஸ்.ஜே.சூர்யா, தன்னை ஒரு நடிப்பு அரக்கனாக அடையாளப்படுத்திக் கொண்டார். அவர் இந்த படத்தில் இணைந்திருப்பதும், நடிப்பு ராட்சசனான விக்ரமுடன் அவர் முதல் முறையாக கைகோர்த்திருப்பதும் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...