இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படம் பற்றிய தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், இன்று அப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படம் வித்தியாசமான களத்தில், மிகப்பெரிய ஆக்ஷன் கமர்ஷியல் ஜானர் திரைப்படமாக உருவாக உள்ளது. சமீபத்தில் தென்னிந்திய முழுக்க பிரபலமாகி இளைஞர்களின் கனவு கண்ணியாக திகழும் கன்னட நடிகை ருக்மணி வஸந்த் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, அருண் வெஞ்சரமுத்து கலை இயக்குநராக பணியாற்றுகிறார். திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் முழு விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...