வேற்று மொழிகளைச் சேர்ந்த நடிகைகள் பலர் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருவதோடு, ரசிகர்களின் கனவு கண்ணியாகவும் திகழ்கிறார்கள். அந்த வரிசையில் புதிதாக இணைவதற்கு பேரார்வம் கொண்டிருப்பவர் மேகா ஷெட்டி. கன்னட சினிமா மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய மேகா ஷெட்டி, தற்போது தமிழ் சினிமாவிலும் கால் பதித்து, தனது திறமையை நிரூபிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
சினிமா கலையின் மீதான தனது அசைக்க முடியாத ஆர்வத்தை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தி வரும் மேகா ஷெட்டி, தொலைக்காட்சி சீரியல் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார் மேலும் ஒரு தொலைக்காட்சி சீரிஸையும் இணைத்தயாரிப்பு செய்துள்ளார். தனது அபாரமான நடிப்புத் திறனை வெள்ளித்திரையிலும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். சந்தேகத்திற்கு இடமின்றி, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் சக நடிகர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடியவராக இருக்கிறார். மேகாவின் அபாரமான நடனத் திறன் அவரது புகழை இன்னும் அதிகமாக்கி நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியுள்ளது.
மேகா ஷெட்டிக்குப் பிடித்த ஜானர் மற்றும் அவர் நடிக்க விரும்பும் கதாபாத்திரங்கள் பற்றி கேட்டபோது, ”எனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் விரும்புகிறேன். தமிழ் படங்கள் கதாநாயகிகளுக்கு அப்படியான கதாபாத்திரங்களை கொடுத்து வருகிறது. நானும் அதைப்போன்ற கதாபாத்திரங்களை ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்பார்த்துள்ளேன். நடிப்புத் தவிர, திரைப்படங்களைத் தயாரிக்கவும், எதிர்காலத்தில் திரைப்பட ஆர்வலர்களுக்கு தரமான கதைகளை கொடுக்கவும் விரும்புகிறேன். இது எனது குடும்பத் தொழில். தொழில் என்பதையும் தாண்டி இது என்னுடைய காதல்” என்றார்.
திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்கள் படம் வெளியீட்டுக்குப் பிறகு அதன் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கு சொந்தம்? என்பது குறித்த சர்ச்சை தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக பேசுப்பொருளாகியுள்ளது...
கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், ஸ்ரீ பி இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா குரல்களில் A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது ’செகண்ட் சான்ஸ்’...
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’...