செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (சிசிஎல்) ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநில திரை நட்சத்திரங்கள் விளையாடும் இந்த கிரிக்கெட் தொடர் ரசிகர்களிடம் தனி வரவேற்பை பெற்றிருப்பதால், இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான செலிபிரிட்டி கிரிக்கெட் லீக், வரும் பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் நடைபெற்று வந்த இந்த கிரிக்கெட் போட்டி முதல் முறையாக ஷார்ஜாவிலும் நடைபெற உள்ளது. மேலும், ஐதராபாத், சண்டிகர், திருவந்தபுரம் ஆகிய பகுதிகளிலும் இப்போட்டிகள் நடைபெருகிறது.
சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியை தென்னிந்தியாவில் ஸ்டார் நெட்வொர்க் ஒவ்வொரு மொழிகளிலும் தனித்தனியாக ஒளிபரப்பு செய்கிறது. தமிழில் விஜய் சூப்பர் சேனலில் போட்டிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகும். மேலும், டிடி ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாஸ் 20 போட்டிகளை ஒளிபரப்பு செய்கிறது.
இந்த நிலையில், தமிழ் சினிமா அணியான சென்னை ரைனோஸ் அணியினர் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, பிப்ரவரி 25 ஆம் தேதி தங்களது முதல் போட்டி ஷார்ஜாவில் நடைபெற இருப்பதை அறிவித்தார்கள். இந்த போட்டியில் சென்னை ரைனோஸை, பஞ்சாப் அணி எதிர்கொள்கிறது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...