‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை சஞ்சனா நடராஜன், தனது நடிப்பில் அடுத்து வெளியாகியிருக்கும் ‘போர்’ திரைப்படத்திற்காக காத்திருக்கிறார்.
பிஜாய் நம்பியார் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் நடிகை சஞ்சனா நடராஜனின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதோடு, ‘ஜிகர்தண்டா டபுல் எக்ஸ்’ படம் போல், இதிலும் அவர் தனது தனித்துவமான நடிப்பு மூலம் பாராட்டு பெறுவார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
’போர்’ படத்தில் தான் நடித்திருக்கும் ரிஷிகா என்ற கதாபாத்திரம் பற்றி கூறிய நடிகை சஞ்சனா நடராஜன், “ரிஷிகா என்ற மருத்துவ மாணவியாக நடித்திருக்கிறேன். என் நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பேனோ அதேபோல தான் ரிஷிகா கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனால், இதில் நான் நடிக்காமல் நானாகவே இருந்தேன்.
நண்பர்களை சுற்றி சுழலும் இந்த கதை அவர்களின் கடந்த கால சம்பவங்கள், அவர்களுடைய தற்போதைய வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதை விவரிக்கும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரசியல் பேசப்பட்டிருக்கிறது, சில சமூகப் பிரச்சனைகள் பற்றியும் பேசப்பட்டிருக்கிறது. படக்குழுவில் உள்ள அனைவரும் உற்சாகத்தோடு பணியாற்றினோம். இயக்குநர் பிஜாய் நம்பியார் படத்தை தெளிவான பார்வையோடு கொண்டு சென்றார். இந்த படத்தில் எனது கதாபத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...