’சாட்டை’ படம் இளம் நாயகனாக அறிமுகமானவர் யுவன். இவரது இயற்பெயர் அஜ்மல் கான். தமிழ் சினிமாவில் யுவன் என்ற பெயரில் நாயகனாக வலம் வரும் இவர், ‘கமர்கட்டு’, ‘அடுத்த சாட்டை’, ‘கீரிப்புள்ள’, ‘இளமி’, ‘விளையாட்டு ஆரம்பம்’, ‘அய்யனார் வீதி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்து தனக்கென்று தனி இடத்தை கோலிவுட்டில் தக்க வைத்துக்கொண்டார். இவரது தந்தை பெரோஸ் கான் தொழிலதிபராக மட்டும் இன்றி, தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருகிறார்.
நடிகர் யுவனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. கும்பகோணம் தங்க விலாஸ் அதிபர் சாதிக் அலியின் மகள் ரமீசா கஹானியை அவர் மணந்தார். யுவன் என்கிற அஜ்மல் கான் - ரமீசா கஹானி திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்ச்சி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஜிபி ரிசார்ட்டில் பிரமாண்டமாக நடைபெற்றது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் இதயத்துல்லா, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், விஜிபி அதிபர் சந்தோசம், கிளரியன் பிரெஸிடென்ஸி ஓட்டல் அதிபர் அபூபக்கர், நடிகர்கள் மன்சூர் அலிகான், ரியாஸ் கான், நடிகை உமா ரியாஸ்கான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, மிஸ் இந்தியா சினேகா உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டு மணக்களை வாழ்த்தினார்கள்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...