சாய் ராஜகோபால் இயக்கத்தில், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’. இதில் யோகி பாபு முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். ராஜேஸ்வரி நடிக்கிறார். இவர்களுடன் சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, ஓ.ஏ.கே.சுந்தர், சி.ரங்கநாதன், சிங்கமுத்து, தாரணி, வையாபுரி, முத்துக்காளை, பயில்வான் ரங்கநாதன், டாக்டர் காயத்ரி, லேகா ஶ்ரீ, மிலிட்டரி கதாபாத்திரத்தில் இயக்குனர் சாய் ராஜகோபால் டி.எஸ்.ஆர்.சீனிவாசன்-(ஹட்ச் டாக்) சென்றாயன், கூல் சுரேஷ், சதீஷ் மோகன், காதல் சுகுமார், சிசர் மனோகர், ஆதேஷ் பாலா, மங்கி ரவி, பெஞ்சமின், கொட்டாச்சி, விஜய கணேஷ். லொள்ளு பழனியப்பன், நளினி சாமிநாதன், மணவை பொன் மாணிக்கம், பத்மநாபன், குணாஜி, காஞ்சி புரம் பாய், கண்ணதாசன், மதுரநாயகம் (தெய்வத்திரு) "போண்டா"மணி, சின் ராசு, அனுமோகன்.. ரேவதி, மணிமேகலை, RDS சுதாகர். மதுரை நண்பேண்டா அட்மின் டெம்பிள் சிட்டி குமார் என ஏராளமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
மேலும், இந்த படத்தில் மூன்று இளம் ஜோடிகளாக, நடிகர் சிங்க முத்துவின் மகன் வாசன்கார்த்தி & பிந்து, மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி & சாய் தான்யா, நாகேஷ் பேரன்- கஜேஷ் & அபர்ணா ஆகியோர் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் ஏற்படும் பிரச்சனைகளையும் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் கதையின் நாயகனாக கவுண்டமணி எப்படி சாமார்தியமாக சமாளிக்கிறார், என்பதை இயக்குனர் சாய் ராஜகோபால் அவர்கள் குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையில் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக இயக்கி வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மூன்று மாதங்களாக பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்து பூசணிக்காய் உடைக்கப்பட்டுள்ளது.
ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ராஜா சேதுபதி படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநராக மகேஷ் நம்பி பணியாற்றுகிறார்.
தற்போது படத்தின் பின்னணி பணிகளில் தீவிரம் காட்டும் படக்கு, கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...