ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் பல பிரமாண்ட வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா, தொடர்ந்து பல பிரமாண்ட படங்களை தயாரித்து வருகிறார். விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’, சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ என ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகும் படங்களுக்காக இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் புதிய உலகத்தரம் வாய்ந்த போஸ்ட் புரொடக்ஷன்ஸ் ஸ்டுடியோ ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
தனது மகள் பெயரில் ‘ஆத்னா ஆர்ட்ஸ் ஸ்டுடியோ’ என்ற பெயரில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தொடங்கியுள்ள இந்த ஸ்டுடியோவில் சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படத்தின் டப்பிங் உள்ளிட்ட பின்னணி பணிகள் தொடங்கியுள்ளது.
இணையற்ற தயாரிப்பு மதிப்பு, திறமையான நடிகர்கள் என படத்தில் ஒவ்வொரு விஷயம் கவனமாகவும் கச்சிதமாகவும் செதுக்கப்பட்டுள்ள ‘கங்குவா’ நிச்சயம் நடிகர் சூர்யாவின் சினிமா பயணத்தில் மிகச்சிறந்தப் படைப்பாக இருக்கும்.
சிறுத்தை சிவா இயக்கத்தில், அசத்தலான லொகேஷன், ஆடம்பரமான செட் மற்றும் பிரம்மாண்டமான புரொடக்ஷன் டிசைனை கொண்டுள்ள ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த படக்குழுவினரும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், நடிகர் சூர்யா ‘கங்குவா’ படத்தில் தனது கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணியை தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜாவின் ஆத்னா ஆர்ட்ஸ் ஸ்டுடியோவில் தொடங்கியுள்ளார்.
போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதால், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் எதிர்பார்ப்பு முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இந்த படம் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில் பல மொழிகளில் வெளியாகிறது. சிறப்பான சினிமா அனுபவத்தை இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும் என ரசிகர்களுக்கு படக்குழு உறுதி கொடுக்கிறது.
'கங்குவா' படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்திருக்க, பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். ’அனிமல்’ படத்தில் தனது நடிப்பிற்காகப் பாராட்டுகளைப் பெற்ற பாபி தியோல் இதில் வில்லனாக மிரட்டலான நடிப்பைக் கொடுத்துள்ளார். இதுமட்டுமல்லாது நடிகர்கள் நடராஜன் சுப்ரமணியம், யோகி பாபு மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.
ஐகானிக் இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி இருக்கும் சார்ட்பஸ்டர் பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி இருக்கின்றனர். அவர்தான் இந்தப் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...