அஜித்தின் ‘பூவெல்லாம் உன் வாசம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான சோனா, பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நிலையில், சில படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்து பிரபலமானதோடு, சர்ச்சை நடிகையாகவும் சில காலம் வலம் வந்தார்.
20 வருடங்களை கடந்து தமிழ் மற்றும் இன்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் குணச்சித்திர நடிகையாக தனது நடிப்பு பயணத்தை தொடரும் சோனா, தற்போது தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மையமாக கொண்டு இணையத் தொடர் ஒன்றை தயாரித்து இயக்கி வருகிறார்.
‘ஸ்மோக்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த இணையத் தொடரை ஷார்ட் பிளிக்ஸ் உடன் கூட்டணி அமைத்து, தனது யுனிக் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்து இயக்கும் சோனா, இதில், தனது வெவ்வேறு வயது காலகட்டங்களில் நடந்த சம்பவங்களை விவரிக்கிறார். மூன்று வெவ்வேறு நடிகைகள் அவரது கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். “இளமை பூக்கும் பதினான்காம் வயதில் நான் ஒரு அழகான வாழ்க்கையை எதிர்நோக்கி கொண்டிருந்தேன், ஆனால் அந்த கரம் என்னை பிடித்தது.. என்னை தள்ளியது.. நான் பேசுவதற்கு யாருமே கிடைக்கவில்லை. நான் ஏதோ உயிர் வாழ்கிறேன்” என்கிற வாசகங்களுடன் நடிகை சோனாவின் 14 வயதான இளம் பருவத்தை இந்த பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் காட்டுகிறது. ‘மத்தகம்’ என்கிற வெப்சீரிஸில் கவுதம் வாசுதேவ் மேனனின் மகளாக நடித்திருந்த நடிகை ஜனனி விஜயகுமார், சோனாவின் இந்த 14 வயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஆல்வின் புருனோ இசையமைக்கும் இத்தொடருக்கு வெங்கி தர்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருள் படத்தொகுப்பு செய்கிறார்.
தற்போது ‘ஸ்மோக்’ இணையத் தொடரின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், இதில் நடித்திருக்கும் மற்ற நட்சத்திரங்கள் பற்றிய விவரங்களுடன், வெளியீட்டு தேதியையும் தயாரிப்பு தரப்பு வெளியிட உள்ளது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...