Latest News :

நானி நடிப்பில் உருவாகும் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியானது!
Monday February-26 2024

இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், நானி இதுவரை ஏற்றிராத தனித்துவமான சாகசம் நிறைந்த அதிரடியான வேடத்தில் நடித்திருக்கும்  பான் இந்தியா திரைப்படம் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’. டி வி வி என்டர்டெய்ன்மென்ட்டின் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் அதிக பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், நடிகர் நானியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. 

 

ஜே. சூர்யாவின் பின்னணி குரலுடன் தொடங்கும் இந்த வீடியோ க்ளிம்ப்ஸில் அவர் நானியின் தனித்தன்மையை ‘சூர்யா’ என்று குறிப்பிடுகிறார். மற்ற மனிதர்களைப் போலவே கதாநாயகனும் கோபப்படுகிறான். ஆனால் அவன் அதை ஒவ்வொரு நாளும் காட்டுவதில்லை. அவனிடம் உள்ள தனி சிறப்பு என்னவென்றால்... எல்லா சம்பவங்களையும் பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு, சனிக்கிழமைகளில் தன்னை தொந்தரவு செய்தவர்களை வேட்டையாடத் தொடங்குகிறான். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் எஸ். ஜே. சூர்யா நானியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன் கிளிம்ப்ஸ் நிறைவடைகிறது. 

 

ஆரம்பம் முதலில் விவேக் ஆத்ரேயா தனது தனித்துவத்தை வெளிப்படுத்திக் கொண்டு, முதல் தரமான கான்செப்ட்டுகளுடன் படங்களை உருவாக்கி வருகிறார். மேலும் முதன் முறையாக முழு நீள கமர்சியல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். நானியின் கதாபாத்திரத்தை அவர் முன் மொழிந்த விதமும், கிளிம்ப்ஸைத் தொகுத்த விதமும்.. பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்திருக்கின்றன.

 

நானியின் கதாபாத்திர வடிவமைப்பு புதுமையாக உள்ளது. அவர் முரட்டுத்தனமான.. ஆனால் ஸ்டைலான தோற்றத்துடன் இருக்கிறார். இந்த கிளிம்ப்ஸில் அவருக்கு வசனம் எதுவும் இல்லாவிட்டாலும், அவரது திரை தோன்றல் பிரமாதம். நானியின் ஆற்றல் மிகு தோற்றம் அனைவரையும் கவர்கிறது. அவர் சிகரெட் பிடிக்கும் ஸ்டைல்.. அந்த கதாபாத்திரத்திற்கு பிரத்யேகத் தோற்றத்தைக் கொண்டு வருகிறது. பின்னர் அஜய் கோஷுடன் அவர் ரிக்ஷா ஓட்டும் காட்சி ரசிக்க வைக்கிறது. இப்படத்தின் தொகுப்பும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.‌

 

முரளி. ஜி யின் ஒளிப்பதிவும், கார்த்திகா ஸ்ரீனிவாசின் படத்தொகுப்பும், ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும் காட்சிகளை மேம்படுத்தி இருக்கிறது. பின்னணியில் இடம் பெறும் 'சமவர்த்தி..' எனும் பாடல் நானியின் கதாபாத்திரத்தை உயர்த்திப் பிடிக்கிறது. டி வி வி என்டர்டெய்ன்மென்ட்ஸின் உயர்தரமான தயாரிப்பும் இந்த கிளிம்ஸில் காண முடிகிறது. நானியின் அனல் பறக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருப்பதால்.. பார்வையாளர்களிடத்தில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

இந்தத் திரைப்படத்தில் 'நேச்சுரல் ஸ்டார்' நானியுடன் பிரியங்கா அருள் மோகன், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

Related News

9556

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’!
Thursday January-09 2025

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...

Recent Gallery