Latest News :

போதைப்பொருல் கடத்தல் வழக்கில் சிக்கிய தயாரிப்பாளர்! - ‘மங்கை’ படம் ரிலீஸ் ஆகுமா?
Tuesday February-27 2024

கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது. மேலும், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர் ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தது. இந்த ஜாபர் சாதிக் ஜே.எஸ்.எம் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழ்த் திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இயக்குநர் அமீர் இயக்கும் ’இறைவன் மிகப் பெரியன்’ என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருந்தவர், கயல் ஆனந்தியை கதையின் நாயகியாக வைத்து ‘மங்கை’ என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார். கதாநாயகியை மையப்படுத்திய இப்படம் வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்,  போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பதால் ‘மங்கை’ படம் வெளியாவது சிக்கல் என்று கூறப்படுகிறது.

 

‘மங்கை’ படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கை ஒருபடி மேலே முன்னேறியிருக்கிறது, என்றெல்லாம் பேசிய நடிகை கயல் ஆனந்தி, தற்போது அப்படம் வெளியாவதே சிக்கல் என்ற நிலை வந்திருப்பதால் ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம். மேலும், இயக்குநர் அமீர் இயக்கி வந்த ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுட்டதாம்.

 

Kayal Anandhi

Related News

9557

சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரார் திரில்லர் ’7G’ ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது!
Tuesday June-25 2024

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி,  இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது...

அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் ’டிஎன்ஏ’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!
Tuesday June-25 2024

ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது...

’கல்கி 2898 கி.பி’ படத்தின் க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியானது!
Tuesday June-25 2024

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் ’கல்கி 2898 கிபி’ படத்தின் பேச்சாகவே இருக்கிறது...