இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கே.கணேஷின் பிரமாண்டமான தயாரிப்பில், வருண் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கும் திரைப்படம் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதோடு, நடிகர் கிருஷ்ணா முதல் முறையாக வில்லன் வேடம் ஏற்றிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
அறிமுகப்படத்தில் இருந்தே நாயகனாக நடித்து வரும் கிருஷ்ணா, தற்போது வில்லன் வேடம் ஏற்றிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்த, அது பற்றி அவரிடமே கேட்டதற்கு, “கெளதம் மேனன் தனது படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் கொடுப்பது மட்டும் இன்றி, அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் எளிதில் சென்றடையும் அளவுக்கு வடிவமைப்பார். அப்படிப்பட்டவர் படத்தில் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பு கிடைத்ததும், ஒரு கணம் கூட யோசிக்காமல் உடனே சம்மதித்து விட்டேன்.
எனக்கு கெளதம் சார் முழு சுதந்திரம் கொடுத்தார், அவருடன் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. படத்தில் சவாலான சண்டைக்காட்சிகள் இருக்கிறது. ஆக்ஷனுக்கு என வரையறுத்த எல்லைகளைத் தாண்டி வருண் நடித்திருக்கிறார். நிச்சயம் அவரை இந்த படம் சிறந்த நடிகராக நிலைநிறுத்தும். பார்வையாளர்களுக்கு பரபரப்பான அனுபவத்தை கொடுப்பதோடு, கெளதம் சாரின் ஆக்ஷன் விருந்தாகவும் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ இருக்கும்.” என்றார்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...