வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் டாக்டர்.ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில், வருண் அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் நாளை (மார்ச் 1) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த வாரம் வெளியாகும் படங்களில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறுகையில், “இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து நாங்கள் தயாரித்த முதல் படமான ‘வெந்து தணிந்தது காடு’ வெற்றிப் படமாக அமைந்தது. இப்போது எங்களின் இரண்டாவது படத்தை வழங்குவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். 'ஜோஷ்வா இமை போல் காக்க' திரைப்படம் ஸ்டைலான ஆக்ஷன்-பேக்ட் படமாக தமிழ் பார்வையாளர்களுக்கு திரையரங்குகளில் நிச்சயம் விருந்தாக அமையும். படம் ஆரம்பித்த முதல் பிரேமில் இருந்து கிளைமாக்ஸ் வரை ரசிகர்களை கவரும் படமாக இது இருக்கும். யானிக் பென் மற்றும் அவரது குழுவினர் பார்வையாளர்களைக் கவரக்கூடிய அதிரடி ஆக்ஷன் காட்சிகளைக் கொடுத்துள்ளனர். வருணுக்கு இது கனவு நனவாகும் தருணம். தன்னுடைய சிறப்பான முயற்சியை இந்தப் படத்தில் கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்ட கிருஷ்ணாவுக்கு நன்றி. இது கெளதம் வாசுதேவ் மேனனின் திரைப்படம் மற்றும் அனைத்து வயதினருக்கும் ஒரு பெரிய விருந்தாக இருக்கும். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படம் நாளை தமிழகத்தில் 200 திரையரங்குகளில் வெளியாகிறது.” என்றார்.
திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்கள் படம் வெளியீட்டுக்குப் பிறகு அதன் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கு சொந்தம்? என்பது குறித்த சர்ச்சை தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக பேசுப்பொருளாகியுள்ளது...
கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், ஸ்ரீ பி இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா குரல்களில் A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது ’செகண்ட் சான்ஸ்’...
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’...