‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கார்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் பரத் ராஜ். இதற்கு முன்பு இவர் ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’, ஆர்யாவின் ‘கேப்டன்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் ஆணழகன் போட்டிகளில் பல பதக்கங்களை குவித்ததோடு, திரை பிரபலங்களுக்கு பிரத்யேக உடற்பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், பரத் ராஜ், சென்னை ஓ.எம்.ஆர்-ல் அதிநவீன வசதிகளை கொண்ட உடற்பயிற்சி கூடம் ஒன்றை தொடங்கியுள்ளார். ’ப்ராட்ஸ் லைஃப் பிட்னஸ் ஸ்டுடியோஸ்’ (Bratzlife Fitness Studio) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த உடற்பயிற்சி கூடத்தின் திறப்பு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், நடிகர்கள் ஆர்யா, ரமேஷ் திலக், அபி ஹாசன், பெசன்ட் நகர் ரவி, நடிகைகள் விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், தீப்தி, ஷெர்லின் சத் ஆகியோரும், சின்னத்திரை பிரபலங்களான சிது, ஸ்ரேயா ஆஞ்சன், சாய் பிரமோதிதா, காவல்துறை கண்காணிப்பாளர் (பொருளாதார குற்றப்பிரிவு) கே. ஜோஸ் தங்கய்யா, தாம்பரம் மாநகர காவல் துறையின் உதவி ஆணையர் ஆர். ரியாசுதீன், நீலாங்கரை சரக காவல்துறை உதவி ஆணையர் பரத், சென்னை தெற்கு குற்றவியல் குழு காவல் ஆய்வாளர் எஸ். மீனாட்சி சுந்தரம், உதவி காவல் ஆய்வாளர் ரஞ்சித் உள்ளிட்ட ஏராளமான திரைத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
இந்த உடற்பற்சிகூடத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் நபர்களுக்கு ஏற்றவாறு பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அதிவேக இன்டர்நெட் வசதியுடன் கூடிய தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஸ்பாத், ஸ்டீம்பாத் போன்ற பல சிறப்பு அம்சங்கள் இந்த உடற்பயிற்சி கூடத்தில் இடம்பெற்றுள்ளன.
ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோவின் உட்கட்டமைப்பை துபாயில் பல ஆண்டுகளாக இன்டீரியர் டிசைனிங் நிபுணராக பணியாற்றி மற்றும் சென்னையில் உள்ள நியாம் ஸ்டுடியோவின் உரிமையாளருமான நிவேதிதா மோகனின் வழிகாட்டலுடன் பிரம்மாண்டமான பொருட்செலவில் சர்வதேச தரத்துடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இங்கு பயிற்சிக்காக பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து உபகரணங்களும் ஸ்பெயின் நாட்டிலிருந்து வெல்கேர் நிறுவனத்தின் மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட உலகத்தரம் வாய்ந்த உபகரணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜிம்மில் பிரத்யேக உடற்பயிற்சியுடன், உங்கள் தசைகளை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சியும் வழங்கப்படுகிறது. உங்களது விருப்பத்திற்குரிய பொலிவான தோற்றத்தை பெறுவதற்கான உடற்பயிற்சியும் அளிக்கப்படுகிறது. உடற்பயிற்சியுடன் உங்களது உடல்வாகுக்கு ஏற்ற அளவிலான உணவு பட்டியல், ஊட்டச்சத்து பட்டியல் ஆகியவற்றுக்கான ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
இதனுடன் ஆணழகனுக்கான பயிற்சி, பெண்களுக்கான பியூட்டி பேஜென்ட், திருமணமாக இருப்பவர்களுக்கான மேக்ஓவர் பயிற்சி, ஆண்களுக்கான உடல் உறுதி பயிற்சி, தசை வலிமைக்கான பயிற்சி என பிரத்யேக பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...