சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, விகமின் 62 வது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை தற்காலிகமாக ‘சீயான் 62’ என்று அழைக்கின்றனர். இப்படத்தில் எஸ்.ஜெ.சூர்யா முக்கியமான வேடத்தில் நடித்து வரும் நிலையில், மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு இப்படத்தில் இணைந்திருக்கிறார்.
மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறை வென்றிருக்கும் சுராஜ் வெஞ்சாரமூடு, 2016 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவரின் நடிப்பில் வெளியான 'ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்', 'டிரைவிங் லைசன்ஸ்', 'ஜன கன மன', 'த கிரேட் இந்தியன் கிச்சன்' ஆகிய படங்களிலும் இவரது தனித்துவமான நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் முதன் முறையாக தமிழில் 'சீயான் 62' படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
'சீயான்' விக்ரம்- எஸ். ஜே. சூர்யா -சுராஜ் வெஞ்சாரமூடு என தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த விருது பெற்ற நட்சத்திர கலைஞர்கள் ஒன்றிணைந்திருப்பதால் 'சீயான் 62' படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்கள் படம் வெளியீட்டுக்குப் பிறகு அதன் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கு சொந்தம்? என்பது குறித்த சர்ச்சை தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக பேசுப்பொருளாகியுள்ளது...
கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், ஸ்ரீ பி இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா குரல்களில் A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது ’செகண்ட் சான்ஸ்’...
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’...