Latest News :

தமிழ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ நடிகர்!
Wednesday March-06 2024

மலையாளத் திரைப்படமான ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதோடு, தமிழ் சினிமாவின் தற்போதைய பேசுப்பொருளாகவும் மாறியிருக்கிறது. நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் உள்ளிட்ட பல பிரபலங்கள் அப்படத்தை பாராட்டுவதோடு, அப்படக்குழுவினரையும் நேரில் வழவைத்து பாராட்டி கெளரவித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ திரைப்படத்தில் சுதீஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தீபக், படத்தை பாராட்டி கொண்டாடியதோடு சுதீஷ் என்ற கதாபாத்திரத்திற்கு கொடுத்த ஆதரவுக்காக தமிழ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

’மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ படத்தின் மூலம் தனது 14 வயதில் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமான தீபக், ‘தட்டத்தின் மறையது’, ‘தீரா’, ‘ரேக்‌ஷாதிகாரி பைஜு’, ‘கேப்டன்’ மற்றும் ‘கண்ணூர் ஸ்குவாட்’ போன்ற பல வெற்றி படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கவனிக்க வைத்தார்.

 

தற்போது ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ படத்தில் சுதீஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மலையாள ரசிகர்கள் மட்டும் இன்றி, மற்ற மாநில ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

 

Actor Deepak and Kamal Hassan

 

இயக்குநர் சிதம்பரத்தின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு ‘சுதீஷ்’ என்ற கதாபாத்திரத்தில் தான் பொருத்தமாக இருப்பேன் எனத் தேர்வு செய்ததற்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள தீபக், இயக்குநர் சிதம்பரம் மற்றும் தனது நடிப்பை ஆதரித்து பாராட்டியதற்காக ரசிகர்களுக்கும், குறிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

Related News

9577

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’!
Thursday January-09 2025

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...

Recent Gallery